கள்ளுக்கு தடையில்லை ??!! பிற மது வகைகளுக்கு மட்டுமே தடை??! பீகார் அரசு ஆணை !!!

Share

மதுவிலக்கை பீகாரில் அமுல்படுத்த முன்வந்த நிதிஷ் குமார் அரசு அகில இந்திய அளவில் பெருத்த வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரியவர்கள் கூட பீகாரை மேற்கொள் காட்டித்தான் பேசினார்கள்.

நேற்று  பீகார் சட்டமன்றத்தில் மதுவிலக்கு  சட்டத்தை தாக்கல் செய்த நிதிஷ் குமார் போதை தரும் பொருட்களின் பட்டியலில் இருந்து கள்ளை  மட்டும் விலக்கி இருந்தார்.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி பிரசாத் பேசுகையில் கள் இறக்கும் சமுதாயமான பாசி வகுப்பினருக்கு தகுந்த மாற்று வருவாய் ஏற்பாடு செய்து தரும் வரையில்  கள்ளுக்கு தடை இருக்காது என்றார்.

தமிழ்நாட்டில் கூட கள் வேண்டுவோர் கழகம் சார்பில் கள் போதை வஸ்து அல்ல அது ஒரு உணவுப் பொருள் என்று வாதிட்டு வருகிறார்கள்.

தென்னை பனை மரங்களின் நீர் எப்படி போதை வஸ்து ஆகும் என்பது அவர்களின் வாதம் .

அதையே பத நீராக வடித்தால் அது மிகச் சிறந்த சத்து பானமாகும் .

எது எப்படியோ கள் தடை செய்யப் பட வேண்டிய போதைப் பொருள் அல்ல என்ற விவாதத்தை பீகார் அரசு  துவங்கி இருக்கிறது என்று எடுத்துக்  கொள்ளலாம்.

This website uses cookies.