Connect with us

முஸ்லிம் சமஸ்கிருதம் கற்றுத் தரக்கூடாதாம்? ஏபிவிபி போராட்டம்?

abvp-protest

கல்வி

முஸ்லிம் சமஸ்கிருதம் கற்றுத் தரக்கூடாதாம்? ஏபிவிபி போராட்டம்?

ஒரு பக்கம் சமஸ்கிருதம் இந்தியாவின் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று பிரச்சாரம்.

மறுபக்கம் ஒரு முஸ்லிம் தன் இரண்டாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு சாஸ்திரி ஆச்சாரியா சிக்ஷா சாஸ்திரி என்று டாக்டர் பட்டமும் பெற்று நெட் மற்றும் ஜே ஆர் எப் தகுதிகளையும் பெற்று வாரனாசி இந்து பல்கலை கழகத்தில் துணைப் பேராசிரியராக நியமிக்கப் பட்டும் கூட அந்தப் பணியை  ஏற்க முடியவில்லை. அவர் பெயர்  பெரோஸ்கான்.

ஒரு முஸ்லிம் எப்படி சமஸ்கிரிதம் கற்றுத் தரலாம் என்று துணை வேந்தர் வீட்டின் முன் கலகம் செய்து வருகிறார்கள் ஏ பி வி பி அமைப்பினர். அவர்களை உள்ளே தூக்கி வைக்க பல்கலை நிர்வாகம் தயாராக இல்லாமல் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே ஆறுதல் வாரனாசி பல்கலையின் சக பேராசிரியர்கள் பெரோஸ்கானுக்கு  ஆதரவாக நிற்பதுதான்.

போராடுபவர்களை  தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.

நான் வேதம் கற்பிக்க வரவில்லை. நான் சமஸ்கிருத இலக்கியம் தானே கற்பிக்கப்  போகிறேன். அதற்கு நான் எந்த மதத்தவனாக இருந்தால் என்ன என்று அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்தரத்தான் ஆள் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in கல்வி

To Top