கங்கை நீரை அஞ்சலக மூலம் விற்கும் மோடி அரசின் வஞ்சக வலை?!

Share

நாடு மத சார்பற்றது.    அரசியல் சட்டம் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி அரசு தன்னை ஒரு சனாதன பார்ப்பனீய அரசாகத்தான் உருவக படுத்திக் கொள்கிறது.

கங்கை புனிதமானது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.

மற்றவர்களுக்கு எல்லா நதிகளும் புனிதமானவைதான்.     கங்கைக்கு என்ன புனிதமோ  அது காவிரிக்கும் உண்டு நர்மதைக்கும்  உண்டு.

பிரச்சினை என்ன என்றால்  புனித கங்கை நீரை விற்கும் வேலையை  ஒரு மத சார்பற்ற அரசு செய்யலாமா என்பதுதான்.

புனிதமா இல்லையா என்ற கேள்வியை ஒதுக்கி மத சார்பற்ற அரசின் வேலை இதுதானா என்ற கேள்வி முன் நிற்கிறது.

கொடுமை என்னவென்றால்  200 மில்லி  500 மில்லி   அளவுகள்  கொண்ட பாட்டில்களில் தெளிவாக இது குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஆனாலும் வாங்குபவர்கள் அதை குடித்து விடுகிறார்கள்.     அந்த அளவுக்கு மன மயக்கம்.

விழிப்புணர்வு கொண்ட தமிழகத்திலேயே சனாதனிகளின் ராஜ்ஜியம் கொடி காட்டி பறக்கிறது.

நிறுத்தப் பட வேண்டிய சட்ட விரோத செயல் இது.

This website uses cookies.