சபரிமலையில் பெண்களுக்கு தடை சரியா??!! நீக்கப்பட வேண்டிய நடைமுறையா??!!

Share

காலத்துக் கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பதால்தான் மதங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றன.

எந்த மதமாக இருந்தாலும் தங்களை மாற்றிகொண்டிருக் கிறார்கள்.

இந்து மதம் ஒரு மதமே அல்ல .       பின் ஏன் அதை மதம் என்று அழைக்கிறார்கள்?.

எல்லாம் ஒரு வசதிக்காகத்தான்.

அய்யப்ப பக்தி தமிழர்களிடம் மேலோங்கி நிற்பது உண்மைதான்.       48  அல்லது  41    நாட்கள் விரதம் இருந்து சுவாமியை தரிசிப்பது ஒரு புனிதமான அனுபவமாக உணர்கிறார்கள்.

அதெல்லாம் பல இடங்களில்   ஒரு வாரம் பத்து நாட்கள் என்றும்   சில இடங்களில் ஒரே நாள் என்று சுருங்கி  அப்போதே  கூட இருமுடி கட்டி பதினெட்டாம்படி அடிவைத்து தாண்டி வழிபடுகிறார்கள்.

பக்தி பல நிலைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெண்களை அவர்களுக்கு மாத விலக்கு காலத்தில் ரத்தப் போக்கு இருப்பதால் விதிப்படியான  41  நாள் அல்லது   48 நாள்  விரதத்தை அவர்களால் கடைபிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை சரியே என்று கேரள உயர்நீதி மன்றம் சொன்ன தீர்ப்பு செல்லுமா என்பது கேள்விக்குறி.

உச்ச நீதி மன்றம் அந்தத் தீர்ப்பின் மீது விரைவில்  என்ன தீர்ப்பு  சொல்லும்    என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .

மாத விலக்கு என்பது இயற்கையானது.     அதற்கும் வழக்கமான பணிகளை  செய்வதற்கும் தொடர்பில்லை என்று ஒப்புக் கொண்டுதான் பெண்கள் அரசுப்  பணிகளில் தொடர்கிறார்கள்.

அலுவலகம் போகலாம்  கோயிலுக்கு போகக் கூடாது என்பது அறிவுக்குப்  பொருத்தமானதா?       செயற்கை கோள்களில் பெண்கள் மாதக் கணக்கில் பயணம் செய்து சாதனை செய்வதற்கு இவைகளெல்லாம் தடைகள் இல்லையென்றால் இறைவனை தரிசிக்க மட்டும் தடையாக அமைய அனுமதிக்கலாமா?

உச்சநீதி மன்றம் இந்த தடைகளை உடைக்கட்டும்.

 

 

This website uses cookies.