Connect with us

சசிகலா புஷ்பா வை அறைந்தாரா ஜெயலலிதா??? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு கிளப்பிய புயல்???

jayaslap sasikala pushpa

Latest News

சசிகலா புஷ்பா வை அறைந்தாரா ஜெயலலிதா??? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு கிளப்பிய புயல்???

சசிகலா புஷ்பாவையும் திருச்சி சிவாவையும் இணைத்து மார்பிங் செய்து நெருக்கமாக இருப்பதுபோல் புகைப்படங்கள் பத்திரிகைகளில் செய்திகள்  வந்து பின்பு அடங்கிப் போனது.

இப்போது டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவா வெளியே வரும்போது எதிரே வந்த அ தி மு க எம்பி சசிகலா புஷ்பா அவரை சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.

ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் மோசமாக பேசியதால் அடித்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார் சசிகலா புஷ்பா.

சிவா புகார் ஒன்றும் கொடுக்கவில்லை.    சென்னை திரும்பி கலைஞரை சந்தித்து விளக்கம் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்க சொன்னார் கலைஞர் என்று சொல்லிவிட்டு அமைதியானார் சிவா.

சசிகலா புஷ்பா தம்பிதுரையை அழைத்துகொண்டு ஜெயலலிதாவை பார்த்ததாக செய்திகள் வந்தன.    சசிகலா புஷ்பா செய்தி ஏதும்வெளியிடாத நிலையில் இன்று  பாராளுமன்ற மேலவை கூடிய   போது சசிகலா சுமத்திய குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெயலலிதா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி  வற்புறுத்துவதாகவும் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும்   தனது உயிருக்கு ஆபத்து  இருப்பதாகவும் பாதுகாப்பு வேண்டும் என்று கதறியபடி புகார் சொல்லி   பேச   அ தி மு க உறுப்பினர்கள் அவர் பேச அனுமதிக்க கூடாது என்று குரல் எழுப்ப  ,   காங்கிரசின்  குலாம் நபி ஆசாத் உறுப்பினர் எவரையும் பேசக்கூடாது என்று தடுக்கும் உரிமை  அ தி மு க உறுப்பினர்களுக்கு இல்லை  என்று ஆதரவுக் குரல் எழுப்ப , எழுத்து மூலம் புகார் கொடுக்க வெங்கையா நாயுடு கூற , தமிழகம் இதுவரை கேட்டிராத திரை மறைவு சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

ஜெயலலிதா அடித்தாரா என்பது ,உடன்  தம்பிதுரை இருந்தார் என்ற செய்தியுடன் சேர்த்து உணர வேண்டிய செய்தி.     அவர் சாட்சி  சொல்வாரா அடித்தார்  ஜெயலலிதா என்று?

ஜெயலலிதா மீது ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதும்  அவர் கட்டளையிட்டாலும் ராஜினாமா  செய்ய மாட்டேன் என்று பாராளுமன்றத்திலேயே அவர் கட்சி எம்பியே  சவால் விடுவதும் ஜெயலலிதா இதுவரை சந்தித்திராத பிரச்சினைகள் .

இதை அவர் சரியாக கையாள வில்லையென்றால் இனி எதிர் காலத்தில் யார் வேண்டுமானாலும் எதிர்த்து கலகம் செய்துவிட்டு நிற்க முடியும் என்ற நம்பிக்கையை அவரது எதிரிகளுக்கு விதைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடி வாங்கிக்கொண்டு அமைதியாகி விடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்க முடிவு செய்த சசிகலா புஷ்பா வித்தியாசமானவர்தான்.

எல்லார் மனதிலும் விடை தேடி அலையும் ஒரே கேள்வி ,   ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை கன்னத்தில் அறைந்தாரா இல்லையா என்பதுதான்.

குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலேயே சுமத்திய  பிறகு விடை கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்துக்கு என்ன மரியாதை???!!!

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top