மணிப்பூரில் தோற்றதா காந்தியம்?? 16 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருகிறது தீர்வைக் காணாமலே??!!!

Share

ஆங்கிலேயர்களை தனது உண்ணா விரதப் போராட்டம் மூலம் அடி  பணிய வைக்க காந்தியால் முடிந்தது.

ஆனால் இரோம் சர்மிளாவால்  16  ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் இந்திய அரசை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியவில்லை.

மணிப்பூரிலும்,   ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்டம் அமுலில் இருக்கிறது.     சுட்டுக் கொன்றதை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அந்த சட்டம் இன்னமும் அமுலில்தான் இருந்து கொண்டிருக்கிறது.

2000 ம் ஆண்டு  மணிப்பூரில்  போலீஸ் வாகன அணிவகுப்பில் குண்டுவெடிப்பு அதை தொடர்ந்து  அஸ்ஸாம் ரைபிள்ஸ்  பத்து பொதுமக்களை சுட்டுக் கொன்றனர்.   அதில் ஒரு தேசிய வீர குழந்தைகள் போட்டியில் பரிசு பெற்ற குழந்தையும் அடங்கும்.  அப்போது ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரதம் .

காந்தி போராடியதற்கும்  சர்மிளா போராடியதற்கும் உள்ள வேறுபாடு அவர் போராடினால்  நாடு முழுவதும் எதிரொலி இருக்கும்.   மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள் .       மணிப்பூர் மக்கள் அமைதியாக ஆதரவு மட்டும் அளித்தார்கள்.   இந்திய அரசு அசைந்து கொடுக்க வில்லை.

ஆங்கிலேயர்களை விட இந்திய  அரசு கொடுமையானது என்ற விமர்சனம் கூட எழுந்தது.

மூக்கில் செருகப்பட்ட டியுப் மூலமாக திரவ உணவு மட்டும் செலுத்தப் பட்டு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் தனது போராட்ட முறையை சர்மிளா மாற்றியிருக்கிறார்.

44 வயதாகும் சர்மிளா ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டு அரசியலில் குதித்து அடுத்த ஆண்டு வர விருக்கும் தேர்தலில் தனித்து நிற்கவும் சட்ட மன்ற  வழியில் போராட்டத்தை தொடரவும் தீர்மானித்தி ருக்கிறார்.

இந்திய ஒற்றுமையை தாங்கி நிற்பது ஆயுதம்தானா???!!!

This website uses cookies.