இந்திய அரசியல்

காந்தியடிகள் உருவபொம்மையை சுட்டு எரித்த இந்து மகாசபை தலைவியை கைது செய்யாதது ஏன்?

Share

காந்தியடிகள் நினைவு நாளன்று உத்தர பிரதேசத்தில் இந்து மகா சபை தலைவி பூஜா ஷகின் பாண்டே என்பவர் கையில் துப்பாக்கியுடன் காவி உடை அணிந்து நிற்கிறார். அவரை சுற்றி பலர் கொடியுடன் நிற்கிறார்கள்.

மகாத்மா நாதுராம் கோட்சே வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். காந்தியை சுட்டு கொலை  செய்ததால் தூக்கில் இடப்பட்ட கோட்சேயை வாழ்த்தி முழக்கம் இடுவது பற்றி  எந்த பா ஜ க தலைவரும் மூச்சுக் கூட விடவில்லை.

பாண்டே துப்பாக்கியால் காந்தி பொம்மையை சுடுகிறார். அதிலிருந்து  சிவப்பு திரவம் வழிகிறது.  பின்னர் அந்த பொம்மையை சுட்டு எரிக்கிறார்கள். இதை படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.

எந்த காந்தியை தேசத்தந்தை என்று கொண்டாடுகிறோமோ அவரை அவமதிப்பதை தண்டிக்கத் தக்க குற்றமாக பா ஜ க அரசு  கருத வில்லையா?

கண்டனம் பெரிதாக எழுந்த நிலையில் மூன்று பேரை கைது செய்திருக்கிறார்கள்.   பூஜா பாண்டேயை தேடி வருகிறார்களாம்.

இன்னும் எத்தனை முறை காந்தியை கொல்வார்களோ?

This website uses cookies.