ஜக்கி வாசுதேவ் குறி வைக்கப்படுகிறாரா குற்றமிழைக்கிறாரா ??!!

Share

உயர்சாதி அல்லாதவர்கள் ஆன்மிக உலகில் வெகு காலம் உயரத்தில் இருக்க முடியாது.

ஆதிக்கம் செலுத்தும் சில பல ஆண்டுகளுக்குபின் எப்படியாவது குறி வைக்கப் பட்டு வீழ்த்தப் ப டுவார்கள்.   அல்லது அவர்களே சூழ்ச்சிக்கு இரையாகி வீழ்ந்து விடுவார்கள்.

24 ஆண்டுகளாக ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோகா மையம் எந்த வித பிரச்னைக்கும் ஆளாகாமல் தப்பி பிழைத்து வந்தது.    சில சிறிய குற்றச்சாட்டுகளை சமாளித்து வந்தது மையம்.

ஆனால் லதா கீதா என்ற இரு  பெண்களின் பெற்றோர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவில் அவர்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக வும் தங்களை பார்க்கக் கூட அனுமதி வழங்க வில்லை என்றும் குற்றம்  சாட்டி ய பிறகு உயர்நீதி மன்றம் மாவட்ட நீதிபதியை அவர்களை பார்த்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அவர்களும் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

ஒருவர் மணமாகி விவாக ரத்து ஆனவர். மற்றவர் திருமணமாகா விட்டாலும்  34 மற்றும் 31  வயது ஆகி இருவரும்  பி டெக் படித்தவர் கள்.

சென்ற மாதம் தங்களுடன் தங்கி இருந்த பெற்றோர் யாரோ சொல்லி பொய் புகார் கொடுத்திருப்பதாக மகள்கள் இருவரும் பேட்டி கொடுக்கிறார்கள்.

எந்த  நீதிமன்றமும் சுய சிந்தனை உள்ள படித்த வயதானவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எங்கும் அனுப்பி விட முடியாது.

அந்த வகையில்  அந்தப் பெண்கள் தங்கள் பெற்றோரை விட்டு விலகி  தாங்கள் விரும்பும் வகையில் பிரமச்சரியத்தை அனுட்டிக்கவோ தனியாக மையத்தில் வசிக்கவோ உரிமை

பெற்றவர்கள்.

ஆனால் இந்த வழக்கு ஈஷா மையத்தில் என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தை எல்லார மனதிலும் எழுப்பி விட்டது.        இதை வளர விடாமல் முடித்து வைக்க வேண்டிய கடமை மையத்தின் தலைவர் ஜக்கி வாசு தேவிற்கு நிச்சயம் உள்ளது.

பெற்றோரை ஒதுக்கி வைத்து திருமணம் சந்நியாசம் இரண்டுமே சரியா என்பதை இக்கால பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்.

ஆன்மிக மையம் நடத்துகி றவர்களும் பெற்றோரை ஒதுக்கி வைத்து ஆன்மிக விடுதலை தருவது தேவையா என்பதையும் விளக்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த குற்றச்சாட்டு சதியின் வெளிப்பாடு என்றால்  சதிகாரர்கள் அடையாளம் காட்டப் பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.

அரசுதான் இந்தக் கேள்விகளுக்குவிடைகளை சொல்ல வேண்டும்.

This website uses cookies.