இந்திய அரசியல்

கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வாளரை அமெரிக்காவில் உரையாற்ற அனுமதி மறுத்த மத்திய அரசு??!!

Share

அமர்நாத் ராமகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சியில் முதலாவது இரண்டாவது சுற்று ஆராய்ச்சியை முடித்தவுடன் திடீரென்று குவாஹாத்திக்கு மாறுதல் செய்யப் பட்டார்.

அப்போதே ஆட்சேபனைக் குரல்கள் எழுந்தன.

இப்போது அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பு இவரது ஆராய்ச்சியை பற்றி உரையாற்ற அழைத்த போது மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

சங்க காலத்து நாகரிகம் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் வெளி உலகத்துக்கு தெரியக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறதா?

மறுக்க எந்த காரணமும் தெரிவிக்கப் படவில்லையாம்.

மத சார்பற்ற சமுதாயம் இங்கே வாழ்ந்த அடையாளம் தெரியக் கூடாது என்பதே நோக்கம் என சந்தேகிக்க இடமிருக்கிறது.

எல்லாம் சரி.  கண்டுபிடிப்புகளை அப்போதைக்கப் போது வெளியிடுவதில் அதிகாரிகளுக்கு என்ன சிரமம்?

வடிகட்டி வெளியிடுவதில் காட்டும் உள்நோக்கம் என்ன?

வரலாற்றை திரிக்க முயற்சி நடக்கிறது.    தடுக்க தமிழ்நாடு அரசு செய்யும் முயற்சிகள் என்ன?

3345 பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் சட்ட மன்றத்தில் அறிவிக்கிறார்.    என்னென்ன பொருட்கள் என்பதை உடனே அறிவிக்க வேண்டும்.

மேலும் ஆராய்ச்சி தேவை இல்லை என தற்போதைய அதிகாரி ஸ்ரீராமன் தெரிவிப்பது கேள்விக்குறிகளை எழுப்புகிறது.

ஆனால் அமைச்சர் ஆராய்ச்சி தொடரும் என்கிறார்.

ஒரு கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்க இருப்பது ஆறுதல் செய்தி.

முன்பு கண்டுபிடிக்கப் பட்டவைகளை மைசூருக்கு கொண்டு சென்றார்களே எதற்காக?

வரலாறு பாதுகாக்கப் படவேண்டும்.   அதாவது உண்மை  வரலாறு.

This website uses cookies.