Connect with us

ஸ்டாலின் நெற்றியில் இடப்பட்ட பொட்டை அழித்து தெய்வத்தை அவமதித்தாரா?

தமிழக அரசியல்

ஸ்டாலின் நெற்றியில் இடப்பட்ட பொட்டை அழித்து தெய்வத்தை அவமதித்தாரா?

மு. க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக  செல்கிறார்.    அங்கே அவருக்கு திருவரங்க நாதருக்கு அணிவிக்கப் பட்ட மாலைகள் பிரசாதங்கள் அவருக்கு பட்டர்களால் அணிவிக்கப் படுகிறது.    அதை வைக்கும்போது ஸ்டாலின் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்கிறார்.   பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நெற்றிப் பொட்டை அழித்து விடுகிறார்.

எனவே ஸ்டாலின் தெய்வத்தை அவமதித்து விட்டார் என்றும் இனி அவரை கோவில்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதே கட்சியை சேர்ந்த தமிழிசை ஸ்டாலினுக்கு மத நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுவதாக கூறியிருக்கிறார்.

இதுதான் இந்து என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலை.

பெரியார் கூட குன்றக் குடி  அடிகள் திருநீறு  அணிவித்த போது அழிக்க வில்லை என்றால் பின்னர் அழித்திருப்பார்.

முஸ்லிம் விழாவுக்கு போனால் அங்கே குல்லா அணிவிப்பார்கள்.   சிறிது நேரம் கழித்து எடுத்து விடுவோம்.   அவமரியாதை செய்வதாக அர்த்தமா?

பொட்டு இடப்பட்ட போது ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டதே ஒரு மரியாதைதான்.

கோவிலுக்குள் அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு மன்னிப்புக் கேள் என்றெல்லாம் பேசுவது ஒரு மத்திய அமைச்சருக்கு அழகல்ல.

யாராலும்  யாரையும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க  முடியாது.

இறைவனை நம்புகிறேன் ஆனால் சமய புறசின்னங்களை அணிவதை  தவிர்க்கிறேன் .  அதற்கு எனக்கு உரிமையுண்டு.    யாரால் தடுக்க  முடியும்.     சிறுபிள்ளைத்தனமாகவும் பொறுப்பில்லாத் தனமாகவும்  பொன்னாரின் பேச்சு இருக்கிறது.

இதற்கிடையில்   மருத்துவர் ராமதாஸ்  பொட்டை அழித்து விட்டால் கோவிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா கிடைக்காதா என்று பகுத்தறிவு வாதிகள் சொன்னால் பரவாயில்லை என்று கிண்டல் அடித்திருக்கிறார்.

அப்படி ஒரு யாகம் நடந்ததாக  தகவல் இல்லை.   எதை வைத்து அவர் இப்படி சொன்னார் என்பதும் தெரியவில்லை.

ஸ்டாலின் பேரை ச்சொல்லி வேறு யாராவது யாகம் செய்தார்களா என்று தெரியவில்லை. செய்தாலும்  அதற்கு ஸ்டாலின் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?

ஸ்டாலின் செய்ததில் தவறே இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top