ஜெயலலிதாவின் பொய்வாதம் -வெளிப்படும் இடம் நீதிமன்றமா? மக்கள் மன்றமா? தீர்ப்பு எப்படி இருக்கும்?

              ஜெயலலிதா வழக்கின் சாராம்சம் என்ன? 
சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரின் பேரில் உள்ள சொத்துக்கள் அவர்கள் தானாகவே சம்பாதித்தது.   அதற்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.     அதாவது ஜெயலலிதாவின் பணத்தில் மற்ற மூவரும் சொத்துக்கள் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது.

               இதுதான் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வைக்கும் வாதம்.   இதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்கிறதோ  இல்லையோ  மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளுமா? 
                அவர்கள்தான் வாங்கினார்கள் என்றால் அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிகள் என்னென்ன தொழில்கள் நடத்தின,  , அதற்குரிய ஆவணங்கள் இவை  என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். 
                உண்மையை சொல்லி வாதிட இயலாத நிலைமையில் ஜெயலலிதாவை நிறுத்தி விட்டார்கள். 
                 சூழ்நிலை சாட்சியங்களை வைத்துதான் சில உண்மைகளை நீதிமன்றம் ஏற்றக் கொள்ள வேண்டி வரும்.    அதில் ஒன்று அனைவரும் ஒரே இடத்தில இருப்பது. 
                  இவ்வளவு பெரிய துகைகளில் தொழில் செய்பவர்கள் தனியாக வசிக்கக் கூட முடியாமல் இருப்பார்களா? 
                    ஆம் என்றால்   பினாமி தடைச்சட்டம் பாயும்.    இல்லை என்றால் வருமானம் காட்ட வழியில்லை. 
                    எப்படி பார்த்தாலும் ஜெயலலிதாவிற்கு தண்டணை உறுதி. 
அதாவது ஒருவேளை நீதிமன்றம் விடுதலை செய்ய முடிவு செய்தால் அதற்கு காரணம்  மற்ற மூவரின் சொத்துகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லியாக வேண்டும். 
                   அது பொய் என்று மக்களுக்கு தெரியும் .    ஆகவே மக்கள் மன்றம் தண்டனை தர தயாராகி விடும். 
                   ஊரறிய பொய் வாதம் செய்து அதிலும் வென்று விட்டால் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து போய் விடும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)