உயிரை உலுக்கிய ” விடை கொடு நாடே ” பாடல் – பாடிய ஜெசிகாவுக்கும் பரிசளித்த விஜய் டி.வி.இன் சூப்பர் சிங்கர் போட்டி தேர்வாளர்களுக்கும் உலகத் தமிழர்களின் உயிரார்ந்த நன்றி!!!

           சிலநாள் முன்பு விஜய் டி.வி. இன் சூப்பர் சிங்கர் போட்டியின் முடிவில் கனடாவில் வசிக்கும் தமிழ் ஈழச்சகோதரி ஜெசிகாவின் பாட்டைக் கேட்க வாய்ப்புக்  கிடைத்தது.    
             பல நாறு புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகள் தகவல்கள் எதையும் தேடத் தேவையில்லாத அளவுக்கு இன்றைய ஈழத் தமிழர்களின் உள்ளக் குமுறலை அந்த ஒரே பாடலில் அந்த ஒரே பாட்டில் ஜெசிக்கா பாடினார்.      பாடினார் என்று சொல்ல முடியாது .   குமுறினார். 
            நாடி நரம்புகள் எல்லாம் துடி துடிக்க , கண்ணீரைத் தவிர எதைத் தாயே காணிக்கை யாக்குவோம் என்ற பரிதவிப்பில் கேட்டோர் மனதில் எல்லாம் ஒரு கையறு நிலையை உருவாக்கிவிட்டார் அந்தச் சகோதரி. 
          மனித நேயம் உலகில் நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்  தமிழர்கள் உரிமை மீண்டும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் எதாவது முடிந்ததை செய்வோம் என்று நினைப்பவர்கள் இந்தப் பாடலை  மட்டும் உலகத் தமிழர்கள் 
அனைவரும் கேட்க தயவு செய்து தங்களால் முடிந்ததை செய்யுங்கள். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)