சிலை திருட்டு வழக்கில் இயக்குனர் சேகர் கைது??? உறுதிப்படுத்த பட வேண்டிய தகவல்கள் ! அதிர்ச்சி தரும் உண்மைகள்!!!


                    குடும்பப் பாங்கான படங்களை எடுத்துப் புகழ் பெற்ற ஒரு நல்ல இயக்குனர் சிலை திருட்டு வழக்கில் கைதாவார் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 
                  அவரே கூட தன்னை சந்தித்த சினிமா துறையினரிடம் தான் குற்றவாளியல்ல என்றே கூறியிருக்கிறார். 
                  பிணை மனு அனுமதிக்கப்படும் பட்சத்தில் வெளியே வந்துதான் அவரது வாக்குமூலம் உலகுக்கு தெரியும். 
              ஓரளவு நல்ல நிலையில் வாழும் இயக்குனர் சேகரைப் போன்றவர்கள் தகாத நபர்களுடன் வைத்திருந்த தொடர்பு அவரை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டதா?   அவரது கலைக்கூடத்தில் குற்றாளிகள் கூடி சதி செய்து பல கோயில்களில் உள்ள சிலைகளை திருட சதி செய்தார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 
               கலைச்சின்னங்களை  திருடும் கும்பலோடு அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுதிப்படுத்த  முயற்சித்து வருகிறோம் என டி ஜி பி பிலிப் கூறியிருக்கிறார்.   உறுதிப்படுத்தாமலா கைது செய்திருக்கிறார்கள்???
             மும்பையை சேர்ந்த வியாபாரிகள் மூலமாகவேதான் புராதன சிவ ஆலயங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த தாக சேகர் வாக்குமூலம் அளித்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். 
               இப்போதைக்கு பிடிபட்ட ஒரு குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. 
                
                          குற்றம் செய்தார் என்பது இறுதியில் நிரூபணம் ஆனால் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட ஏழ்மைதான் காரணம் என்பது அடிபட்டுப் போகும்.         சமுதாயத்தின் கேடுகளை ஆய்வு செய்பவர்கள் கூட கேடுகள் செய்யத் துணிய தயங்க மாட்டார்கள் என்பதற்கு சேகர் கைது சான்றும்  ஆகிவிடும். மாறாக கைதுக்கு காரணம் வெறும் சந்தேகமே என்பது உறுதிப் படுத்தப் பட்டால் காவல் துறையின் நடைமுறைகள் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் !!!