ஜல்லிக்கட்டு தடை நீங்குமா? பா ஜ க சட்டத் திருத்தம் கொண்டு வருமா அல்லது நாடகமாடி கைவிடுமா?

16TH_JALLIKATTU7_894661gசென்னை வந்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்ற ஜுன் மாதம் 17  ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வந்தாவது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று உறுதி கூறினார்.    இதுவரையில் எந்த நடவடிக்கையும் காணோம்.    தை மாதம் வரப போகிறது.   உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று தடை விதித்த போது அதற்கு காரணம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில்  ‘ காளை ‘ என்பது காட்சிப் படுத்தப் படக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்ததுதான்.       அது இருக்கும் வரை தடை இருந்துதான் தீரும். ஒரே வழி பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதுதான்.            செய்யும் மனம் இருந்தால் இதற்குள் சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்கலாமே?   அதை செய்யாமல்  உச்ச நீதிமன்றம் செல்வதிலும் பயன் ஏதும் இல்லை.         எந்த ஜல்லிகட்டிலும் காளைகள் இறந்ததாக வரலாறு இல்லை. மனிதர்கள் தான் தங்கள் பாதுகாப்பை பணயம் வைக்கிறார்கள். ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் காளைகளுக்கு துன்பம் தருவதாக சொல்பவர்கள் நோக்கம் தமிழர்களின் நாகரிக அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் ஒருபோதும் இதில் ஈடுபட்டவர்கள் அல்ல. மற்றவர்கள்  இதில் ஈடுபட கூடாது என்றுதான் போராடுகிறார்கள்.              மத்திய அரசை அனைவரும் சேர்ந்து வலியுறுத்தினால்தான் இது சாத்தியம் .

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com