பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய சிவசேனா!!! நாட்டுப்பற்றா? ஆதிக்க உணர்வா?

       எல்லையில் பாகிஸ்தான் அடிக்கடி  துப்பாக்கி சூடு நடத்துகிறதாம், . எனவே அந்த நாட்டிலிருந்து வரும் பாடகர்கள் இசை நிகழ்ச்சி நடத்துவது தேவையில்லை.  இதுதான் சிவசேனா நிலைப்பாடு. 
            கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு குலாம் அலியை அழைத்து ஏற்பாடு செய்தவர்கள் சிவசேனா எச்சரிக்கைக்கு பின் நிகழ்ச்சியைரத்து செய்து விட்டார்கள். 
             சேனா ‘வெளிப்படையாக எதிர்ப்போம்’ என்று அறிவித்தால் தெருக்களில் ரகளை செய்வோம் என்று  பொருள்.   எனவே ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை . 
              தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நீதிதான் இப்போது அரசாட்சி செய்கிறது .  
              இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பாரம்பரிய பன்முகத் தன்மையையும் சகிப்புத் தன்மையையும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது என்று உபதேசம் செய்திருக்கிறார்.    
            ஆட்சியாளர்கள் காதில் இது விழுமா?