வனச் சட்டத்தின் கீழ் கூலிகளான அப்பாவி தமிழர் களை சிறையில் தள்ளி ஆனந்தப் படும் ஆந்திர அரசு காண்டிராக்டர்கள் மீதும் கடத்தல்காரர்கள் மீதும் வழக்கு தொடுக்காதது ஏன் ?? ஜெயலலிதா கடிதத்துக்கு பதில் அளிக்காத ஆந்திர முதல்வர் !!!

        jeyalalitha சந்தன மரம் வெட்டியதாக 20   அப்பாவி தமிழ் கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொலை செய்த ஆந்திர அரசு ஒரு காண்டிராக்டர்கள் மீது கூட ஒரு வழக்கு பதியவில்லை.
              பணபலமும் ஆள்பலமும் இருக்கும் கொடியவர்களை விட்டு விட்டு அப்பாவி தொழிலாளர்கள் மீது குண்டுகளை  பாய்ச்சியது நியாயம்தானா?
              அந்தக் கொடுமை தொடர்பாக தமிழக அரசு நியாயமான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை.
               இப்போது 516   அப்பாவி தமிழர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் ஆந்திர சிறைகளில் வாடுவதாக ஜெயலலிதா சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
               ஒரு பதிலுமில்லை . ஜாமீனில் வேலி வர உதவத்தான் கேட்டுகொண்டிருகிறார்.
                   காண்டிராக்டர்களால் அழைத்துச்செல்லப் பட்டவர்கள் மீது வழக்கு என்றால் காண்ட்ராக்டர்கள் மீதும் வழக்கு பதியப் பட வேண்டும் அல்லவா?
                இல்லை என்றால் தொழிலாளர்களையும் விடுதலை செய்வது தானே நியாயம்.
               எல்லாவற்றுக்குமா  நீதிமன்றம் செல்ல வேண்டும்???