ஜால்ரா போட்டும் ஜெயலலிதா அரசால் மண்டை உடைக்கப்பட்ட வேல்முருகன் கட்சியினர்!! ஆளும்கட்சியின் அடிமைத்தனம் !!!!


           velmurugan    ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டால் மட்டும் போதாது!    எதிர்த்து குரல் கொடுத்தாலும் அடிப்போம் என்பதை காட்டி விட்டது அதிமுக அரசு.
                நெல்லையில் பெப்சிக்கு 36   ஏக்கர் அரசு நிலம் 99 ஆண்டுகளுக்கு  குத்தகை   Rs. 36,000/-     15    நாட்களில் அனுமதி.   சந்தை மதிப்பு  Rs.  15  கோடி.   இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய அதிக அறிவு தேவையில்லை .
             நாம் தமிழர் போராடியபோது ஒன்றும் நடக்க வில்லை. இப்போது வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் அறிவித்தவுடன்     10   பேர் மண்டையை உடைத்து கூட்டத்தை கலைத்திருக்கிறது.     பொதுத்தேர்தலில் ஆளும் அ தி மு க வுடன் தான் கூட்டணி என்று ஏற்கனேவே வேல்முருகன் அறிவித்திருந்தார்.
          கூட்டணி கட்சி என்றால் விட்டு விடுவார்கள் என்று அவர் நம்பியிருக்கலாம்.
             அடித்து விரட்டியதன் மூலம் வேல்முருகன் தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்து விட்டதாக கருத முடியாது.
              ஏனென்றால் அடித்தாலும்   வாங்குவதை  வாங்கிக்கொண்டு    காலில் விழுபவர்கள் யார்  என்பதை ஜெயலலிதா அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்/.
               ஒன்றரை ஆண்டு காலம்  பொடாவில் சிறையில் வைத்திருந்தவர் என்பதையும் மறந்து கூட்டுக்கு வந்தவர் வைகோ என்பதை ஜெயலலிதா மறந்திறக்க மாட்டாரே௧.
                 கோ கோ கோலா , பெப்சி என்று தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண் சாமரம் வீசும் தமிழர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை.?