” மூடு டாஸ்மாக்கை ” பாடலை பாடிய பாடகர் கோவன் மீது தேசதுரோக வழக்கு? ஜெயலலிதா அரசின் அடக்குமுறை எல்லை மீறுகிறது! விமர்சனங்கள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறுமா?

       kovanan   ” ஊருக்கு ஊரு சாராயம் ! தள்ளாடுது தமிழகம்!   ” என்ற பாடல் மூலம் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் நிகழ்ச்சி பிரபலமாகி  வருகிறது.    அதில் வரும் ”   ஊத்திகொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” என்று ஒரு வரி வரும் அது ஆட்சியாளர்களை கோபப்  படுத்தியிருக்கும் போல் தெரிகிறது.

          பாடகர் மீது இ த ச 124 A, 153A 505 (1) ஆகிய பிரிவுகளின் மீது தேசதுரோகம், இரு பிரிவினரிடையே சண்டை மூட்டுவது, குற்றம் செய்ய தூண்டுவது என குற்றம் சாட்டி கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறது ஜெயா அரசு.
             இதில் தேசதுரோகம் எங்கே வந்தது.?  குடியை வளர்ப்பவர் தேச பக்தர்  . குடியை ஒழிக்கப் போராடுபவர் தேசதுரோகியா???
             வழக்கம்போல மான நஷ்ட வழக்கு போட்டிருக்கலாமே?   அதுகூட எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. அதிலும் தனது மானம் எப்படி பறிபோனது என்பதை ஜெயலலிதா நிரூபிக்க வேண்டிவரும்.
              நிற்காது என்பது தெரிந்தே அதிகாரத்தை பயன் படுத்தி அலைக்கழித்து துன்புறுத்தும் கொக்கம் கொண்டதே இந்த வழக்குகள்.   பதவி போகும் முன்பு வாபஸ் பெறுவதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.
               மகஇக வினர் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு ஊழல் எதிர்ப்பு மூட நம்பிக்கை எதிர்ப்பு என்று எல்லா சமூக அவலங்களையும் எதிர்த்து போராடி வருபவர்கள்.    அது ஓர் கலை இலக்கிய அமைப்பு.    அவர்கள் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல.   கருத்துப் போராளிகள்.
               அவர்கள் மீது அரசின் அடக்கு முறையை ஏவி விடுவது கோழைத்தனம்.
                பொதுவாழ்வில் சொத்துக் குவித்தவர்கள் மீதும் ஊழல் செய்தவர்கள் மீதும் தண்டிக்கப் பட்டவர்கள் மீதும் விமர்சனங்கள் எழுவது எதிர்பார்க்கப்  படுவதே..   என்னை யாரும் விமர்சிக்க கூடாது என்றால் நீ அரசியலுக்கு வந்திருக்க கூடாது.
                  விமர்சனங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொள்ளக் கூடாது.   ஒட்டுமொத்தமாக என்ன சொல்ல வருகிறார் என்று தான் பார்க்க வேண்டும்.
              டாஸ்மாக்கை   மூடவேண்டும் என்பது கோரிக்கை.   திறந்து வைத்திருப்பவரை ஊத்திக் கொடுப்பவர் என்றும் அவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை உல்லாசம் என்றும் சொல்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டுமே தவிர வேறு  பொருள் எடுத்துக் கொண்டு தண்டிக்க முனைவது அக்கிரமம்.
                டாஸ்மாக்கை திறந்து வைத்திருப்பதும் மக்களை குடியில் ஆழ்த்தியிருப்பதும் மாபாதகம் என்றால் மூடசொல்பவர்களை சிறையில் அடைப்பது பெரும்பாவம்???!!!

                திருந்துமா ஜெயா அரசு?