அப்துல் கலாமுக்கு வரலாறு காணாத அஞ்சலி!!! யாகுப் மேமனுக்கு தூக்கு!!! இதுதான் இந்தியா !!!!


              பாரத     ரத்னா  அப்துல் கலாம் மறைந்ததை ஒட்டி இன்று அவர் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.  பிரதமர் மோடி உட்பட நாடே திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டுஇருக்கிறது.    பட்டி தொட்டியெங்கும் அவரது படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். 
            மாணவர் களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே மரணம். யார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் எப்போதும் திருகுரானையும் திருக்குறளையும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கேசட்டுகளையும் வைத்திருத்தல் ,இவை மூன்றும் அவரது அடையாளம்.
                வல்லரசு என்பது வெறும் அணு ஆயுதங்களோடு பொருள் கொள்ளாமல்  கல்வி இளைஞர் நலம் போன்றவற்றில்  தன்னிறைவு , பெற்று விட்டாலே வலிமையான அரசுதான் என்பதை வலியுறுத் தியவர்  .   இவர் ஒரு முஸ்லிம்.  
              மும்பை குண்டு விடுப்பில் 257  உயிர்களை காவு வாங்கிய சதி வழக்கில் கைதாகி தூக்கு தண்டணை வழங்கப் பட்ட யாகுப் மேமனுக்கு இன்று தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்டது.  கார்களில் ஆர் டி எக்ஸ் ரக வெடிமருந்துகளை நிரப்பி நகரின் பல்வேறு இடங்களில் வெடிக்கச் செய்து அப்பாவி  மக்கள்  கொல்லப்பட காரணமாக இருந்தவர்.   சதியில் ஈடுபட்டதை  ஒப்புக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்.  மற்ற 
சதிகாரர்களா ன தாவூத் இப்ராஹிமும் இவரது அண்ணன் டைகர் மேமனும் கராச்சியில் வாழ்ந்து வருகின்றனர். இவரும் முஸ்லிம்தான்.
               இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் ஆனால்  வேறு வேறு சேதிகளை சொல்லுகின்றன. 
               உண்மைக்கும் உழைப்புக்கும் எப்போதும் மரியாதை உண்டு.  
அதேபோல் வஞ்சகத்திற்கும்   கொலைக்கும் எப்போதும் தண்டணை உண்டு. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)