தமிழ் நாட்டில் ஒரு அசிங்கம்! தலை குனிவு? வெளிச்சத்துக்கு வந்த மானத்தின் மறுபக்கம். தண்டணை எப்போது? எப்படி?

      17  வயதுப் பெண்ணை அவளது தந்தை, சகோதரன், நெருங்கிய உறவினர்கள் , வக்கீல்கள், காவல் துறை அதிகாரிகள்  ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டுனர் என்று சகலரும் கடந்த பல ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. சிவகங்கை நகர சப் இன்ஸ்பெக்டர் மற்றும் மூவர்  கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். . 
        சென்னை உயர்நீதி மன்றத்தில் வின்சென்ட் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த  அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி தமிழ் நாட்டில் கூட இந்த மாதிரி நடக்குமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. 
          சமுதாயம் புரையோடி இருக்கிறது.    உடனடியாக வைத்தியம் செய்தால் தவிர மேலும் பாதிப்பு பெருகும் ஆபத்து இருக்கிறது. 
            தமிழ் நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இனி யாரும் இம்மாதிரி சமூக குற்றங்களை செய்யும் எண்ணத்தையே தடுக்கும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.