பண்டிகையை பட்டாசு வெடித்துதான் கொண்டாட வேண்டுமா? வெடி பொருட்களை தடை செய்ய கோரும் மனுவில் உச்சநீதிமன்றம் விசாரணை! சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?

     வெடிபொருட்களை தடை செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பட்டாசுகளின் தீமைகளை பிரச்சாரம் செய்யவும் உத்தரவிட்டது.

           தீமை என்பதை ஒப்புக்கொண்ட பிறகும் முழுவதும் தடை செய்ய முடியாமல் உச்சநீதி மன்றம் திணறுவது எதனால்?    மத நம்பிக்கைகளில்  குறுக்கிடுவதாக கூக்குரல் கிளம்பும் என்பதால்தான். .
             இத்தனைக்கும் தீபாவளி பண்டிகைக்கும் பட்டாசு வெடிப் பதற்கும் என்ன சம்பந்தம் ?    வெடிப்பது  கொண்டாட்டத் தின் ஒரு  பகுதியாக நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து விட்டது.
              ஒரு தீமை எப்படியோ சமூக வழக்கமாக புகுந்து விட்டது.   தீமை  என்று தெரிந்தும் விடாபிடியாக தொடர்வது அறிவுடைமை ஆகாது.
            அதே நேரத்தில் சீன பட்டாசு கோடிக்கணக்கில் நாட்டின் உள்ளே புகுந்து விட்டது.  அதிகாரிகளின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய அளவில் சரக்குகள் துறைமுகங்கள் வழியாக உள்ளே புகுவது என்பது நடக்காது.
             தனிப்படை கொண்டு சீனப் பட்டாசுகளை அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதி  மன்றம் இந்த கள்ளத்தனமான இறக்குமதிக்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com