தமிழர்களை அடக்கத்தான் தடை-ஜல்லிக்கட்டு ஒரு சாக்கு !

எந்த ஜல்லிக்கட்டிலும் எந்த காளையும் இறந்ததாக வரலாறு இல்லை.
பின் ஏன் அதை தடை செய்ய துடிக்கிறார்கள்? 
மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே என்ற ஆதங்கமா? 
நாள்தோறும் கோடிக்கணக்கில் கோழி, ஆடு, மாடு ,முயல்,என்று கணக்கில்லாமல் கொன்று தின்னப் படுகின்றன.   அதை ஏன் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை.    நீ வேண்டுமானால் ஒதுங்கி இரு.   
மற்றவரை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. 
கொல்லாமை ஒரு அறம்தான். சட்டமல்ல. 
நாள்தோறும் விபத்துக்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கிறார்கள். அவற்றை குறைக்க சிந்திக்க வேண்டும். 
ஜல்லிக்கட்டில் இறப்பது. ஒரு விபத்து. . கூச்சல் போடுகிற யாரும் வேடிக்கை பார்க்க கூட செல்வதில்லை. 
 மேனகா காந்தி ஒரு மத்திய அமைச்சர்.  ஜல்லிக்கட்டு வெளிநாட்டு இறக்குமதி  என்கிறார். 
வெளிநாட்டில் ஈட்டியால் குத்தி மாடுகளை கொல்வதும்  இங்கு கையால் திமிலை பிடித்து நிறுத்துவதும் ஒன்றா? 
வன விலங்குகளை துன்புறுத்தி விளையாட்டு காட்ட கூடாது என்ற சட்டத்தை பயன் படுத்தி ,  புலி, சிங்கம் கரடி யானை போன்ற விலங்கு களோடு  காளையை சேர்த்து தடை பெற தவறான வழியை கடை பிடித்திருக்கிறார்கள்.    இது ஒரு பண்பாட்டு மேலான படையெடுப்பு. 
இந்த ஆண்டு நிறைவேற்றப் பட்ட சதி திட்டம் அடுத்த ஆண்டு தொடரக்கூடாது.     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041