ஏரிகளை ஆக்ரமிக்கும் குற்றம் தொடர யார் காரணம்? போரூர் ஏரி நடுவில் ரோடு போடும் பொதுப் பணித்துறை ? பசுமை தீர்பாயம் தடை????

             சென்னை போரூர் ஏரியில் நானூறு ஏக்கர் காணாமல் போய் விட்டது.  இருப்பது  330   ஏக்கர் மட்டும்தான்.      நடுவில் மண் கொட்டும் பணியை பொதுப் பணி துறை செய்ததால் ஒருவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை கேட்டதை அடுத்து தற்காலிக தடை உத்தரவு கிடைத்திருக்கிறது. 
               1987  வாக்கில் எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு போரூர் ஏரியில் நிலம் ஒதுக்கப் பட்டதாக தெரிகிறது. 
              அரசே பல ஏரி புறம்போக்குகளை பேருந்து நிலையங்களாகவும் மருத்துவ மனைகளா கவும்  மாற்றியிருக்கிறது. 
            பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம்  பலவிதமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. 
             கலைஞர் ஆட்சி காலத்தில் Tamilnadu Protection of Tanks and  Eviction of Encroachment Act 2007  நிறைவேற்றப் பட்டது. 
              ஏரிகளை ஆக்ரமிப்பவர்களும் பொதுமக்கள்தான் .    ஏதோ அரசுக்கு மட்டும்தான் பொறுப்பு இருப்பதாக குற்றம் சாட்டுவதில் பொருள் இல்லை.   சக பொதுமக்கள் தடுக்க முனைந்தால் ஆக்கிரமிப்புகள் உருவாக மாட்டா. 
             மக்களின் விழிப்புணற்சியே ஆக்கிரமிப்புகளை தடுக்கும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)