உழைக்காமலேயே பிழைக்கும் கலையை கற்றவர்கள் ராகுல்காந்தி குடும்பம்?!!! அருண் ஜெட்லி தாக்கு!!!! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் நாற்றமெடுத்த பாராளுமன்றம் !!!!!!!


                       பாராளுமன்ற மக்களவை ஒதுக்கபட்ட நேரத்தில்  48% மும் மேலவை 9 % மும் மட்டுமே வேலை செய்திருக்கிறது. 
                        பாராளுமன்றம் நடத்த ஒரு நிமிடத்துக்கு  Rs. 30,000  செலவாகிறது. கடந்த  19 வருடங்களில் 2,163  மணி நேரம் வீணடிக்கப் பட்டிருக்கிறது. எனவே தடங்கல் இல்லாமல் பாராளுமன்றம் இயங்க ஒரு வழிகாட்டு முறைகளை வகுத்து தர கோரி  உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தக்கலாகி இருக்கிறது. 
                        குழாயடிச் சண்டை அளவுக்கு பாராளுமன்ற விவாதம் இருந்திருக்கிறது.    
                       லலித் மோடிக்கு சிபாரிசு செய்ததில் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று ராகுல் நேரடியாக சுஷ்மா ஸ்வராசைப் பார்த்துக் கேட்க ‘ போய் உங்கம்மாவிடம் கேள். எவ்வளவு பணம் குவாத்ரோசியிடம் இருந்து வந்தது என்று ” என சுஷ்மா பதிலுக்கு முழங்க வாரன் அன்டர்சன் என்ற போபால் விஷ வாயு வழக்கில் சம்பத்தப்பட்டவரை திருட்டுத்தனமாக அமெரிக்க அனுப்பி விட்டு அதற்கு பதிலாக நேரு குடும்பத்துக்கு வேண்டிய முகமது யூனுஸ் மகன் அடில் ஷா என்பவரை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரவில்லையா எனவும் பதில் கேள்வி எழுப்ப சபை விவாத மன்றமாக இல்லாமல் வசைபாடும் மன்றமாக மாறிப் போனது . 
                   ஒரு கட்டத்தில் காங்கிரஸ் விவாதங்களை அனுமதிக்க மறுப்பதில் தனிமைப் பட்டு போனது.
                     பாராளுமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது.    இந்த அளவு தரம் தாழ்ந்து தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் சம்பவங்கள் இதுவரையில் நடந்தது இல்லை .   
                    எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக  அருண் ஜெட்லி  சொன்னார் ,  ‘ இன்னமும் நாணயமான பல மனிதர்களின் குழந்தைகள் வாழ்வதற்கு என வேலை செய்துதான் பிழைக்கிரார்கள். 
ஆனால் பல தலைமுறைகளாக இந்த நாட்டின் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் மட்டும் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ததே இல்லை. வேலை செய்யாமலேயே எல்லா வசதிகளுடனும் வாழ்வதை ஒரு கலையாகவே அவர்கள் கற்றிருக்கிறார்கள்.   நமக்கு அது தெரியவில்லை. ”   என்று நேரடியாகவே ராகுல் சோனியா குடும்பத்தை குற்றம் சாட்டினார். 
                     இவர்கள் போட்ட சண்டையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டதும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுவது தள்ளிப் போனதும் தான் நடந்தது.