மக்கள் நல கூட்டணி; நோக்கம் ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதா? மாற்று என்பது ஏமாற்றுவதா? நிலைக்குமா? சந்திக்கு வந்த முரண்பாடுகள்?

 

 77984366_114139690தி மு க – அ தி மு க விற்கு மாற்றாக என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்கள் ?
மக்கள் நல கூட்டணியில் வைகோ, வலது இடது கம்யுனிஸ்டுகள் ,விடுதலை சிறுத்தைகள். இன்று குறைந்த பட்ச செயல் திட்டத்தை வெளியிட்டு சில நிலைப்பாடுகளை அறிவித்திருக்கிறார்கள் .                தேர்தலுக்கு பிறகும் இந்த நான்கு கட்சிகள் மட்டுமே இயக்கமாக நீடிக்கும்.   முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்போம். ஜி கே வாசனும் விஜயகாந்தும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்.காங்கிரஸ், பா ஜ க , திமுக அதிமு;க வோடு இப்போது பா ம க வோடும் சேருவதில்லை.
முரண்பாடு 1;  மதுவிலக்கு கொண்டுவருவேன் என்ற திமு;கவையும் மதுவிலக்கு பற்றி எந்த உத்தரவாதமும் தர தயாராக இல்லாத அ தி மு க வையும் இவர்கள் எப்படி ஒன்றாக பார்க்கிறார்கள்.?.
முரண்பாடு 2; ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி , வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்து கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியது முதல் டான்சி வழக்கில் உச்சமீதிமன்றம் ஜெயா செய்த குற்றத்தை உண்மை என்று தீர்ப்பளித்து தண்டனையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றது முதல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டு மேன்முறைஈட்டில் கேள்விக்குறிய வகையில் விடுதலை செய்யப் பட்டு இப்போது உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீட்டை சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் ஜெயலலிதாவையும், 2G  வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்தாலும் கலைஞர் டி வி பணப பரிவர்த்தனை வழக்கில் விசாரணையை எதிர் கொண்டு இருந்தாலும் இதுவரை தண்டிக்கப் படாமல் இருக்கிற திமுகவையும் ஒரே தட்டில் வைத்து இருவரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்பதில் நியாயம் இருக்கிறதா ?
முரண்பாடு 3;    அவரவர் கொள்கையை விட்டுகொடுக்காமல் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவோம் என்றால் அவரவர் தனித் தனியே சிலபிரசினைகளில் செயல்படுவோம் என்பது நாட்டுக்கு உகந்ததா?
முரண்பாடு 4;  இந்த நால்வருக்கும் மொத்தமே ஐந்து சத வீத வாக்குகள் தான் தேறும் என்ற நிலையில்  திமுக , பாமக தவிர்த்து அதிமுக வை ஆட்சியை விட்டு அகற்ற முடியுமா?
முரண்பாடு 5 ; அகற்றப்பட வேண்டிய ஆட்சியா அதி மு க அரசு என்றால் ஆம் என்று கூறுபவர்கள் அதை அகற்ற வேண்டி அனைத்து கட்சிகளையும் ஒருங்கினைக்காமல் அ தி மு க எதிர்ப்பு வாக்குகளை பிரித்தால் ஜெயலலிதா மீண்டும் வந்து விடுவாரே என்று வைகோவோடு நீண்ட காலம் பயணித்தவர்கள் சொன்னபோது வந்தால் வரட்டும் ஸ்டாலின் வரக்கூடாது என்று வைகோ பேசினார் என்று புகார் வந்தபோது இதுநாள் வரை வைகோ அதை மறுத்து அறிக்கை விட வில்லையே ஏன் ?
கடைசி  வரையில் இவர்கள் நீடிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இலை.          ஒருவேளை, தனித்து பேரம் பேசினால் குறைத்து கொடுப்பார்கள் என்பதால் கூட்டணியாக பேரம் பேசினால் கூடுதல் இடம் கிடைக்கும் என்று அணி  சேருகிறார்களோ என்னவோ?
ஜெயலலிதா வராமல் தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என்று முழங்கிய விஜயகாந்த் இன்று தி மு க – அதி மு க இருவரையும் வர விட மாட்டேன் என்று சுருதி மாறி பேசுகிறார்.   அவரை இந்த கூட்டணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று நம்புகிறாரோ ?
 தமிழர்களின் தலை விதியை நினைத்து நொந்து கொள்வதா? நம்பிக்கையோடு காத்திருப்பதா? ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களோடு சேர்ந்து வாசனும் விஜயகாந்தும் அரசியல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இன்றைய நிலை.