Latest News

கற்பழிப்பு சாமியார் ராம் ரகீம் சிங்குக்கு ஆதரவளித்த பா ஜ க ??!! தலித் அரசியல் காரணமா??

Share

சீக்கியர்களிடையே  சாதி பிரிவினை அதிகம்.       ஜாட் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள சமயம் அது.    பல சாதிகள் சீக்கிய மதத்தை தழுவினாலும் இன்னும் இந்து சாதிப் பிரிவினை சீக்கியர்களை விடவில்லை.

அடக்கப் பட்டு கிடந்த தலித் மக்கள் சீக்கியர்கள் ஆன பின்னும் சம உரிமை கிடைக்காமல் திணறினர்.

அவர்கள் சார்பில் முகிழ்த்த இயக்கம்தான் தேரா சச்சா சவுதா .     ஐந்து மாநில   தாழ்த்தப் பட்ட  மக்கள்  இதில் சேர்ந்தார்கள்.

வழக்கம் போல ஜாட் சீக்கியர்களை தோற்கடிக்க தலித் சீக்கியர்களின் ஆதரவை நாடி பா ஜ க படையெடுத்தது.     கிடைத்தவர் ராம் ரகீம் சிங்.

அவரது ஆதரவு கிடைத்ததால் தான் தேர்தலில் பா ஜ கவுக்கு வெற்றி கிடைத்தது.    இல்லையென்றால் பா ஜ க அமைச்சர்கள் ராம்பிலாஸ் சர்மா அனில் விஜி , குரோவர்  ஆகியோர் ஏன் ராம் ரஹீம சிங்குக்கு  1.12  கோடி  நிதி வழங்க வேண்டும்?

மாதா மாதம் ஹரியான  பா ஜ க வுக்கு சாமியார் கோடிக்கணக்கில் கப்பம் கட்டி வந்துள்ளார்.

அதனால்தான் தீர்ப்பு நாள் அன்று லட்சக் கணக்கில் தொண்டர்களை கூட அனுமதித்து இருப்பார்களா?

தடை உத்தரவு பிறப்பித்து  அமுல் படுத்தி இருந்தால் கலவரம் உருவாகி இருக்காது.    இன்று வரை   36  பேர் இறந்திருக்கிறார்கள்.    பல நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு தலைமை யகத்தை  மூடி வைத்து என்ன பயன்.   ?     நீதி மன்றம் கடுமை காட்டிய பிறகு நஷ்டத்தை ஈடு கட்ட ஆசிரம சொத்துக்களை கையகப் படுத்த ஆலோசித்து வருகிறார்கள்.

பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் வெளிப்படையாகவே ராம் ரகீமுக்கு ஆதரவு அளித்து பேட்டி கொடுக்கிறார்.  ன் ” ஒரு பெண் மட்டும் சொல்வது சரியா ?  கோடிக்கணக்கான பக்தர்கள் சொல்வது சரியா ?”  என்று கேள்வி வேறு கேட்கிறார்.          இரட்டை வேடம் பா ஜ க வுக்கு புதிதா என்ன?
போலி சாமியார்கள்     வடக்கில்தான் அதிகம்.      ராம்    பால் ,  ஆசாராம் பாபு , பீமானந்த் ,

நிர்மல் பாபா, சுவாமி விகாசானந்த்  போன்ற சாமியார்கள் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு  தண்டணை அனுபவித்து வருபவர்கள்.

அரியானா முதல்வர் மனோஹர்லால் கட்டார் பதவியேற்ற பிறகு ராம் பால் கைதானபோது   6  பேரும்  ஜாட் கிளர்ச்சியின் பொது  30  பேரும் தற்போது      36 பேரும் உயிர் இழந்து இருக்கிறார்கள்.     பதவியில் தொடர இவருக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?

நம்மூர் பிரேமானந்தா இதே கற்பழிப்பு வழக்கில் சிக்கி இரண்டு ஆயுள் தண்டணை விதிக்கப் பட்டு சிறையிலேயே இறந்தார்.

தாழ்த்தப்  பட்ட  சமுதாயத்தின் பிரதிநிதிகள் ஆக ஆன்மிக துறைக்கு வருபவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்கி தான் சார்ந்த சமுதாயத்துக்கும் கெட்ட பெயர்  வாங்கி தருகிறார்கள்.

ராம் ரகீம் சிங்கின் நடவடிக்கைகள் ஒரு ஆன்மிக குரு  செய்யும்  வேலைகள்  அல்ல.

அவரை விட குற்றவாளிகள் அவருக்கு அங்கீகாரம் தந்து ஆதரவு அளித்த   பா ஜ க அரசியல்வாதிகள்.     அவரது ஆதரவு இருந்தால் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிந்த பிறகு அவரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார்கள்.    வெற்றி பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள்.

அரசு ஆதரவு இருக்கும் தைரியத்தில் ஆட்டம் போட்டார் ராம் ரகீம்.     இப்போது சிறையில் அடைபட்டி ருக்கிறார்.

சாமியார்கள் ஒரு போதும் திருந்த போவதில்லை.    மக்கள் தான் திருந்த வேண்டும்.

வடக்கே ஒரு பெரியார் தோன்ற வேண்டும்.    அரியானா  பா ஜ க அரசு பதவி விலக வேண்டும்.

 

 

 

 

This website uses cookies.