மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டுப் பேசிய பா ஜ க தலைவர் நீக்கம்? தொடரும் போராட்டம்??!!

Share

மாயாவதிக்கு நேரம் சரியில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல்.   கட்சிக்குள் சீட்டுகளை ஏலம் விடுவதாக குற்றம் சாட்டி முன்பே சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்தார்.

மூத்த தலைவர் ரவீந்திரநாத் திரிபாதி யும் அதே காரணங்களை சொல்லி ராஜினாம செய்தார்.    போதாதற்கு அமித்ஷாவும் இப்படியே போனால் மாயாவதி மட்டும்தான் மிஞ்சி இருப்பார் என்று விமர்சித்தார்.      அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் மாயா.

இன்னிலையில் பா ஜ க வின் துணைத் தலைவர்  தயா  சங்கர் சிங்  காலையில் ஒரு கோடி வாங்கிக்கொண்டு ஒருவருக்கு சீட் கொடுத்து மதியம் மற்றொருவர் இரண்டு கோடி கொடுத்தால் அவருக்கு  மாற்றிகொடுப்பார் .   மாலையில் இன்னொருவர் மூன்று கோடி கொடுத்தால் அவருக்கு மீண்டும் மாற்றிக் கொடுப்பார்.   மாயாவதியின் செய்கை பாலியல் தொழிலாளி யை விட மோசமானது என்று விமர்சித்தார்.

பற்றிக்கொண்டது நெருப்பு.    யாகாவாராயினும் நாகாக்க என்னும் வள்ளுவர் வாக்கு பலித்து விட்டது.      அவரது நாக்கை கொண்டுவருபவருக்கு ஐம்பது லட்சம் பரிசு என்று ஒருவர் அறிவிக்க நாடெங்கும் போராட்டங்கள் அறிவிக்கப் பட அவரை கட்சியை விட்டு நீக்கியது பா ஜ க.

போதாது வழக்குப் போடு என்று மாயாவதி கோடி தூக்க கலவரம் இப்போது ஓயாது  போல் தோன்றுகிறது.

தலித் என்றால் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நினைக்கிறார்களோ?

சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

This website uses cookies.