இந்திய அரசியல்

முஸ்லிம் கிறிஸ்தவ குத்தகைதாரர் களை வெளியேற்றும் ஆந்திர அரசு!! பா ஜ க வின் சகவாச தோஷம் நாய்டுவை கெடுத்தது???!!!

Share

இந்து அற நிலையங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகளை நியமித்தால் தவறு இல்லை என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பு சொல்லி விட்டன.

கேரள கோவில்களுக்கு கம்யுனிஸ்டுகள் அறங்காவலர்களாக நியமிக்கப் பட்ட ரகசியம் இதுதான்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பா ஜ க வோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றிபெற்றார்.

இந்நிலையில் அதிரடியாக இந்து கோவில்களுக்கு சொந்தமான  நிலங்களில் இனி இந்து அல்லாதவர்கள் சாகுபடி செய்யக் கூடாது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.     அதன்படி இந்து அல்லாத குத்தகை சாகுபடிதார் களுக்கு உடனே நிலத்தை காலி செய்து உடன் ஒப்புவிக்கும்படி அறிவிப்புகள் அனுப்பப் பட்டு வருகின்றன.

தைக்கால் சர்ச் நிலங்கள் பலவும் இந்துக்களிடம் குத்தகை ஒப்பந்தத்தில் இருந்து வருகின்றன.      அவர்கள்  இதுபோலவே இந்துக்களை   காலி செய்து விட்டுக் குத்தகைக்கு விட ஆரம்பித்து விட்டால்  சமூக ஒற்றுமை எப்படி நிலைக்கும்?

சட்டத்தின் பரிசீலனைக்கு இது நிற்காது என்பதுதான் உண்மையாக இருந்தாலும் அதை முறையாக சொந்த செலவில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவது யார்??

எல்லா மத வழிபாடு இடங்களுக்கும் எல்லாரும் சென்று வர உரிமை வேண்டும்  என்ற குரல் ஒலிக்கும் வேளையில் இத்தகைய மதம் சாரா உரிமைகளை  மதங்களுக்குள் ஒடுக்க முயல்வது சரியா ?

தலித் கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றவில்லை என்று சர்சுகளிடம் சான்றிதழ்  வாங்க வேண்டும் ?    அப்போதுதான் நிலத்தில்  குத்தகை தாரராக  நீடிக்க முடியும்.

இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் மதவெறி சட்டம் இருப்பது போல் தெரிய வில்லை.

பணக்காரர்கள் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சந்திர பாபு நாயுடு பேச முனைகிறார் என்றால் மத வெறியில் பா ஜ கவை மிஞ்சி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

தெலுகு தேசம் என்ற தன் கட்சியின் பெயரை இந்து தெலுகு தேசம் என்று மாற்றம் செய்வாரா?

This website uses cookies.