Connect with us

அப்துல் கலாமிற்கு சிலை வைத்தது இஸ்லாத்துக்கு எதிரானதா?? ஜவாஹிருல்லாவின் கருத்தில் நியாயம் இருக்கிறதா??~!!

abdul-kalam statue

Latest News

அப்துல் கலாமிற்கு சிலை வைத்தது இஸ்லாத்துக்கு எதிரானதா?? ஜவாஹிருல்லாவின் கருத்தில் நியாயம் இருக்கிறதா??~!!

மறைந்த குடியரசுத் தலைவர்  ஏ பி ஜெ அப்துல் கலாமிற்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற  இடத்தில் மணி மண்டபம்  கட்டி அதில் அவரது  ஏழு அடி உயர வெண்கல சிலையை மத்திய அரசு  நிறுவியிருக்கிறது.

அதற்கு மனித  நேய மக்கள் கட்சி தலைவர்   ஜவாஹிருல்லா கருத்து சொல்கையில் அவருக்கு  சிலை வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.    காலப் போக்கில் அது வழிபடுமிடமாக மாறும் அபாயம் இருப்பதாக அவர் கருத்து இருக்கிறது.

முஸ்லிம்கள் சிலை வணக்கம் செய்யாதவர்கள்.     நாயகத்தையே அவர்கள் உருவ வடிவில் வடிப்பதில்லை.       நாயகத்துக்கு உருவம் கொடுத்து கார்ட்டூன் போட்ட விவகாரத்தில் ஐரோப்பாவில் பெறும் பிரச்சினையை கிளப்பியது மட்டுமல்ல பல கொலைகளுக்கும் காரணமாக அமைந்தது.

உருவம் இல்லாத ஒருவருக்கு உருவம் கொடுப்பது இகழும் நோக்கம் கொண்டது என்று ஆட்சேபிப்பதில் பொருள் இருக்கிறது.     ஆனால்   முஸ்லிம் தலைவர்கள் பலரும்  அவர்களை புகைப்படம் எடுப்பதிலோ அதை பெரிதாக விளம்பரம் செய்வதிலோ பெருத்த ஆட்சேபம் செய்ததில்லை.

அப்துல் கலாம் அவர்களுக்கு வைத்திருக்கும் சிலை அவரது நினைவைப் போற்றும் வகையில் அமைந்தது மட்டுமே.       யாரும் சிலை வணக்கம் செய்யப் போவதில்லை.   அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மாலை போட்டு மரியாதை செய்வது வழிபடுவது ஆகாது.

சில  முஸ்லிம் தலைவர்கள்  வணக்கம் சொன்னால்கூட எதிர் வணக்கம் சொல்வதில்லை .    மாறாக வாழ்க என்றோ நன்றி என்றோ வேறு வார்த்தைகளில் பதில் சொல்வார்கள்.   காரணம் அவர்கள் வணக்கம் சொல்வதே வணங்குவது என்று பொருள் கொள்கிறார்கள்.    வணக்கம் சொல்லும்போது தலை யை சற்று குனிந்து சொல்வது வழக்கம்.

அல்லாவைத்தவிர வேறு  யாருக்கும் தலை வணங்கக் கூடாது  என்ற கொள்கைக்கும்  சக மனிதனுக்கு வணக்கம் தெரிவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை தெரியாமாலா சொல்கிறோம்!?

ஒருவேளை பா ஜ க அரசு இந்த மரியாதையை அப்துல் கலாம் அவர்களுக்கு செய்ததின் மூலம் பா ஜ க முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்துக்கு பலவீனம் ஆகிடுமோ என்ற அச்சம் ஜவாஹிருல்லாவிற்கு இருக்குமேயானால் அது சரியே.

பா ஜ க உள்நோக்கத்தோடு செய்திருந்தாலும்  அதையும் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நாம்.

பா ஜ க வை விமர்சிக்க வேறு  எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

அப்துல் கலாமிற்கு தமிழர்கள் செய்யும் மரியாதையில் அதை காட்ட வேண்டாம்.

தமிழர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் கலாம்  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதே நமக்கு பெருமை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top