ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இடைத்தேர்தலில் விஜய் கட்சி வெற்றி பெற முடிந்தால் அதுதான் உண்மையான திருப்புமுனையாக இருக்கும். சென்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்பதை தவிர கணிசமாக செலவு செய்து வெற்றி பெற்றார்கள்.
அதேபோல இடைதேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பணம் கொடுத்து தான் வென்றார்கள் என்று இருக்க கூடாது. ஆனால் கணிசமாக வேறு வேறு வகைகளில் பணம் பாயும் என்பது தெளிவு.
வெற்றி பெற வைத்தவர்களை ஏன் ராஜினாமா செய்தீர்கள் என்ற கேள்வியை வாக்காளர்கள் எழுப்ப அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னாலும் ஏற்புடையதாக இருக்காது. எப்படியிருந்தாலும் வெற்றி பெற்றவர்கள் சாதனை படைப்பார்கள்.