Connect with us

ரஜினி ஒரு வேஸ்ட்; போராட்டம் -வன்முறை இவைகளின் அர்த்தம் தெரியுமா??

தமிழக அரசியல்

ரஜினி ஒரு வேஸ்ட்; போராட்டம் -வன்முறை இவைகளின் அர்த்தம் தெரியுமா??

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் யாரோ ஒருவர் சீருடை அணிந்த ஒரு காவலரை தாக்கி விட்டாராம்.

உடனே பொங்கி எழுகிறார் ரஜினி.  வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப் படுவதுதான் என்றும் இவர்களை தண்டிக்க கடமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தை மெளனமாக நடத்தியதில் ரஜினியின் பங்கும் கமலின் பங்கும் இருக்கும் போல.

இல்லையென்றால் ஏன் வாரியம் அமைக்க வேண்டும் இதில் மோடியின் அரசு செய்தது எந்த வகையில் வஞ்சகம் என்றெல்லாம் விளக்கி பேசியிருக்கலாம்.

இதை எல்லாம் பேசாமல் என்ன போராட்டம்.?   பேச விரும்ப வில்லை.   பேசினால் யாரையாவது கண்டித்து பேச வேண்டும்.   நோகாமல் நோன்பு  இருப்பது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்க வேண்டும்.

அமைதியாக போராடும் மக்களிடம் காவல்துறை ஏன் வன்முறையை பயன் படுத்த வேண்டும்?  காவல் துறையின் அத்துமீறலை கண்டித்து என்றைக்காவது ரஜினி பேசி இருக்கிறாரா?

போராடாமல் எந்த பிரச்னை தீர்ந்திருக்கிறது ?

போராடியதினால்தான் இப்போது ஐ பி எல் போட்டி சென்னையில் நடத்த பாதுகாப்பு தர முடியாது  என்று தமிழக அரசு சொன்னதால் இப்போது வேறு இடத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்.

ரஜினிக்கு மன்றம் வைத்திருக்கும் தமிழர்கள் சிந்தித்து மன்றங்களை கலைக்க வேண்டும்.

சினிமாவில் நடி.   எல்லாரும் ரசிக்கிறோம்.

அரசியலில் நடிக்காதே. பல் உடை பட்டு போவாய்.

ரஜினி பார்ப்பன சக்திகளின் ஏஜெண்டு என்ற முத்திரை பலமாக விழுந்து விட்டது.   காரணம் லதா ரஜினி.    அதிலிருந்து மீள ரஜினிக்கு சுய புத்தி கிடையாது.    யாரோ ஆட்டி வைக்க இவர் ஆடுகிறார்.

உருவாகி வரும் ரஜினி-பா ஜ க – இ பி எஸ் – ஓ பி எஸ் அடிமைகளின் கூட்டணி வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.

ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்- தமிழிசையும் ஜெயக்குமாரும்.

புரிஞ்சு போச்சா?

துரோகிகளையும்  காட்டிக் கொடுப்பவர்களையும் தமிழகம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும்.   வெறுத்து ஒதுக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top