25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்டு !!! பா ஜ க அரசின் அடக்கு முறை நியாயமானதா???

                ராஜ்ய சபையில் பெரும்பான்மை இல்லாததால் பல சட்டங்களை இயற்ற முடியாமல் பா ஜ க அரசு தவித்து வருகிறது.

              காங்கிரசும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுஷ்மா ஸ்வராஜ்  ம பி முதல்வர் சிவராஜ் சிங் சவுஹன் , ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் ராஜினாமா செய்தால்தான் பாராளுமன்றத்தை நடத்த விடுவோம் என்று  ரகளை செய்து வந்தது. 
               மாநில முதல்வர்களை அவர்கள் மீதி என்னதான் குற்றச்சாட்டு இருந்தாலும் போதிய விசாரணை இல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ராஜினாமா செய்யக் கோருவதும் அது சம்பந்தமான அவர்களது விளக்கங்களை கோரிப் பெறாமல் விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. 
                  இந்நிலையில்   25  உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அவையை நடத்த முடிவு செய்து சபாநாயகர் உத்தரவிட்டு அதன் பின் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 
                இந்த நடை முறை சரிதானா?     காங்கிரஸ் ஆண்ட போது
 பா.  ஜ .க வும் இதே நடைமுறையை பின்பற்றிதான் குற்றம் சாட்டப் பட்டவர்கள்  பதவி விலக நிர்பந்தித்து. வந்தது. 
               அதே நிபந்தனையை இப்போது காங்கிரஸ் முன் வைப்பதால் பா ஜ க வும் திணறுகிறது. 
                எவர் மீதும் முதல் தகவல் அறிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 
              1989  ல்  63  எம் பி க்கள் , சஸ்பென்ட் செய்யப் பட்டதை நாயுடு மேற்கொள் காட்டுகிறார்.      2013 ல்  ஆகஸ்டு மாதத்தில்  12  பேர் ஐந்து நாட்களுக்கும் , 2012 ல் எட்டு பேர் நான்கு நாட்களுக்கும் ,  2013 அக்டோபர் மாதத்தில்  9  பேர் ஐந்து நாட்களுக்கும் , 2014 பெப்ரவரியில்  16 பேர் ஐந்து நாட்களுக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.   
               பாராளுமன்றம் என்பது விவாதம் செய்யத் தானே தவிர முடக்குவதற்கான அமைப்பு அல்ல. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)