மாதம் 2 லட்சம் பென்ஷன் வேண்டாம் என மறுத்த அமிதாப் பச்சன் குடும்பம்!!! இல்லாதவர்களுக்கு கொடுங்கள் என வேண்டுகோள் !!!


 

 உ.பி. அரசு இந்த ஆண்டு 56  கலைஞர் களுக்கு மாதம் ரூபாய்  50000 பென்சன் அறிவித்தது.    இதன்படி அமிதாப் குடும்பத்தில் நான்கு பேர் தலா மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ரூபாய் இரண்டு லட்சம் மாதம் பெற்றுக்கொள்ள உரிமை பெற்றவர்கள். 

       அவர் குடும்பத்தில் அனைவரும் கோடிகணக்கில் சம்பாதிப்பவர்கள்.    கோடிக்கணக்கில் வருமான வரி கட்டுபவர்கள் .    
               நலிந்த கலைஞர்களுக்கு உதவித் துகை என்பது வேறு.  கோடிகணக்கில் வருமான வரி கட்டுபவர்கள் அந்த கணக்கில் வரமாட்டார்கள்.       
                  அந்த வகையில் அரசு தருகிறது. நாங்கள் பெற்றுகொள்கிறோம் என்று சொல்லாமல் தகுதி படைத்த  மற்றவர்களுக்கு தந்து விடுங்கள் என்று நல்ல மனதுடன் சொன்ன அமிதாப் பாராட்டுக்கு உரியவர்.