Connect with us

முதலீட்டாளர்கள் மாநாடு- 100 கோடி ருபாய் செலவில் விளம்பரம் தேடிய ஜெயலலிதா!!! அந்திம ஆட்சிகாலத்தில் செய்த தந்திரம் !! அரசியல் ஆதாயம் மட்டுமே மிச்சமிருக்கும்!!! பலன் கிடைப்பது கேள்விக்குறி???

Latest News

முதலீட்டாளர்கள் மாநாடு- 100 கோடி ருபாய் செலவில் விளம்பரம் தேடிய ஜெயலலிதா!!! அந்திம ஆட்சிகாலத்தில் செய்த தந்திரம் !! அரசியல் ஆதாயம் மட்டுமே மிச்சமிருக்கும்!!! பலன் கிடைப்பது கேள்விக்குறி???


     தமிழக முதலீட்டாளர்கள் சாம்ராஜ் நகரில்  12  ஆயிரம் கோடியை முதலீடு செய்ய விட்டு விட்ட அரசு தமிழக அரசு. 
       2014 , 2015  மே என்று இரண்டு முறை மாநாட்டு தேதியை மாற்றிய காரணம் இதுவரை விளக்கப்படவில்லை . 
        நான்கு ஆண்டுகளில் 46,602 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அரசு அறிவித்தது.   இதில் எத்தனை தொடங்கப் பட்டது, வேலை வாய்ப்பு எத்தனை பேருக்கு என்ற விபரங்களை அரசு தெரிவிக்காதது ஏன்?   
             அ தி மு க ஆட்சியில்  2011 முதல்   2015  வரை செயலாக்கத்துக்கு  வந்த முதலீடு வெறும் 5.64 சத வீதம் தான் . அதாவது அறிவிக்கப் பட்டதற்கும் அமுலுக்கு வந்ததற்கும் உள்ள இடைவெளி.  அப்படியென்றால் இப்போது ஜெயலலிதா அறிவித்த  2.42  லட்சம் கோடி முதலீடு அமுல்படுத்தப் படும்போது எத்தனை சதமாக இருக்கும் என்பதை அனுமானிக்கலாம். 
            vision 2023  ‘ திட்டப்படி  15   லட்சம்  கோடியில் உள்கட்டமைப்பு என்ற திட்டப்படி  4  லட்சம் கோடி செலவிடப் பட்டிருக்க வேண்டும். 
அதேபோல் அதில் கண்ட அறிவிப்புகள் எல்லாம் அமுல்படுத்த வில்லையே காரணம் என்ன???
             மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் முடக்கப் பட்டது ஏன்? 
             ஹூண்டாய் விரிவாக்கம் ராஜஸ்தான் செல்கிறது. இசுசு நிறுவனம் ஆந்திராவுக்கு போய் விட்டது. செயின்ட் கோபைன் விரிவாக்கம் 1000  கோடியில் ராஜஸ்தான் செல்கிறது. ராம்கோ சிமெண்டு கர்நூலுக்கு செல்ல அனுமதி வாங்கியிருக்கிறது. பாக்ஸ்கான்  30000  கோடி முதலீடு மராட்டியம் போகிறது. அ தி மு க ஆட்சிக்கு வந்தபின் 50000  கோடி முதலீடு இங்கிருந்து வெளியே போயிருக்கிறது.     யார் பொறுப்பு?    
             மின்வெட்டுபிரசினையால்  12000  கோடி முதலீடுகள் கர்நாடகாவிற்கு போய்விட்டது. இப்போது கூட 2016 ல் மின்மிகை மாநிலம் ஆகும் என்றுதான் அறிவிப்பு சொல்கிறது. 
              42,000   ஏக்கர் நிலம் தயார் என்கிறது அரசு அறிவிப்பு .  எங்கே அது என்ற விபரங்கள்   தெரிவிக்கப் பட வில்லை. 
             85  லட்சம்  இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அரசுத்துறையில் 5  லட்சம் பணியிடங்கள் காலியாம் .    4 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது. ? 
             30   நாளில் தொழில் அனுமதி என்பது கேட்க நன்றுதான். அமுல்படுத்தப் பட்டால் தான் அதற்கு பொருள் உண்டு. 
             குத்தாட்டம், தொண்டர் ஆட்டம் என்று களை கட்டிய நிகழ்ச்சிகள் யாருக்காக என்பது யாருக்கும் புரியவில்லை. 
            கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதைபோல் அடிப்படை கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்துக்கும் இல்லாததும் அரசின் தொழிற்கொள்கையும், அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனுசரணையான அணுகுமுறையை கையாளததும்தான் நான்காண்டு கால திட்டங்களின் தோல்விக்கு காரணம்.  
             ஆறு மாதத்தில் தேர்தலை சந்திக்கப் போகும் ஆட்சியால் என்ன சாதிக்க முடியும் என்று முதலீட்டாளர்கள் சிந்திக்க மாட்டார்களா?
               அரசு என்பது நிலையானதுதான் .   ஆனால் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள். 
              இது தேறுமா என்ற சந்தேகம் தீர வேண்டும் என்றால் அரசு எல்லா தகவல்களையும்  உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் அப்போதுதான் அரசின் மீது நம்பிக்கை வரும் என்று தி மு க  பொருளாளர் மு க ஸ்டாலின் கேட்டிருந்தார்.  
மொத்தம  98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ  2,42,160  கோடி முதலீடு செய்து  4,70,065  பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது . 
               குறிப்பாக தொழில் துறையும் எரிசக்தி துறையும்தான்  65 ஒப்பந்தங்களோடும்  2 லட்சத்துக்கும் மேலான முதலீடுகளோடும் முன்னிலை வகிக்கிறது.  சிறு ,குறு,நடுத்தர தொழில்களும் தகவல் தொழில் நுட்ப துறையும் கைத்தறி ஜவுளிதுறையும், கல்ல்நடை பராமரிப்பு ,வேளாண துறையும் 33 ஒப்பந்தங்களை பெற்றிருக்கின்றன.  
                விமர்சிப்பவர்களை எல்லாம் எதிரிகளாக பார்க்காமல் மக்களுக்கும் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது என்று உணர்ந்து செயல்பட்டால் எல்லாரும் வெளிப்படுத்திய  அவநம்பிக்கைக்கு  அவசியம் இருந்திருக்காது. 
              அடுத்த மாநாடு 2017 ல் நடைபெறுமாம்.   அப்போது யார் ஆட்சியில் இருப்பார்களோ?   மக்கள் இருப்பார்களே மதிப்பீடு செய்ய!!!!
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top