இந்திய அரசியல்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கை -மத்திய அரசு முடிவு- இப்போதாவது சேர்த்தீர்களே ??!!

Share

நரிக்குறவர்களையும், குருவிக்காரர்களையும், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுவரை இவர்கள் சேர்க்கப்படாததுதான் ஆச்சரியம்.   இன்னும் காத்திருப்போர் பட்டியல் ஏராளம்.

ஜெயலலிதாவும்  ‘என் தலைமையிலான அரசு வைத்த வேண்டுகோளுக்கு இணங்க முடிவெடுத்த மத்திய அரசுக்கு ‘ என்று தன்னால்தான் இது வந்தது என்று அறிக்கை வெளியிடுகிறார்.

கலைஞரோ தான் 1070 ம் ஆண்டிலிருந்தே குரல் கொடுத்து வந்ததையும் 2008-2009 ம் ஆண்டிலேயே நரிக்குறவர் நல வாரியம் அமைத்ததையும்  2013 லேயே தான் மத்திய அமைச்சர் கிஷோர சந்ர டியோவுக்கு கடிதம் எழுதியதையும் நினைவூட்டி நன்றி கூறுகிறார்.

எப்படியோ இப்போதாவது அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது .

இன்னும் விடுபட்டுப் போன பழங்குடியினரையும் அந்தப் பட்டியலில்  சேர்த்தால் தான் தாமதப் படுத்தப் பட்ட நீதி அவர்களுக்கு கிடைக்கும்.

This website uses cookies.