Connect with us

சீக்கியர்களை சீரழித்து வரும் போதை மருந்து -“உட்தா பஞ்சாப் ‘ திரைப்படம் திறக்கும் உண்மைகள்??!!!

Latest News

சீக்கியர்களை சீரழித்து வரும் போதை மருந்து -“உட்தா பஞ்சாப் ‘ திரைப்படம் திறக்கும் உண்மைகள்??!!!

சீக்கியர்களுக்கு புகைபழக்கம் தடை செய்யப் பட்டது.
ஆனால் சமீப காலமாக அவர்களை போதை மருந்து பழக்கம் சீரழித்து வருகிறது.
போதை மருந்து விற்பவர்களால் சமூக விரோதிகள் மட்டுமல்ல அரசியல் தலைவர்கள் பலரும் கோடிகளில் புரள்கிறார்கள் .

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் செல்வாக்கு பெற்றுவருவதற்கு காரணமே அது போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது தான்.
அகாலி தள கட்சிக் காரர்கள் பலரும் போதை மருந்து வியாபாரத்தில் சம்பந்தப் பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

அகாலி தள -பா ஜ க கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் இந்த போதை மருந்து பிரச்சினையில் இருந்து மீள்வதே அவர்களுக்கு பெரும் பாடு.
இந்நிலையில் உட்தா பஞ்சாப் திரைப்படம் போதை மருந்து எப்படி சீக்கியர்களை சீரழிக்கிறது என்பதை படம் போட்டு காட்டுகிறது.

தணிக்கை குழு தலைவர் நிஹலாணி படத்தில் 89 இடங்களில் வெட்டு உத்தரவு பிறப்பிக்க இன்னொரு குழு மறுபரிசீலனை செய்து 13 இடங்களாக அதை குறைக்க மும்பை உயர்நீதி மன்றம் அதை வெறும் 1 வெட்டாக குறைத்து அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை ஒட்டி இன்று படம் வெளியாகிறது.
தணிக்கை குழு வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பொறுத்து இந்த பிரச்சினை சில தீர்வுகளை தந்திருக்கிறது.

பஞ்சாபின் சமூக பிரச்சினைகள் போதை மருந்தால் எப்படி எல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதை காரணம் காட்டி தணிக்கை குழு அனுமதி வழங்க மறுத்ததை உயர்நீதி மன்றம் ஏற்றுகொள்ள வில்லை.

அது உங்கள் வேலை அல்ல . பெரியவர்கள் மட்டும் அல்லது எல்லாரும் என்று யார் பார்க்கலாம் என்று சான்றிதழ் வழங்குவது மட்டுமே உங்கள் வேலை. வெட்டுவது உங்கள் வேலை அல்ல என்று உயர் நீதி மன்றம் கருத்து சொல்லி இருக்கிறது.

Central Board of Film Certification என்ற சொல்லில் எங்குமே தணிக்கை என்ற சொல் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் சுட்டி காட்டி உள்ளது.
இது நாள் வரை சட்டத்தில் இல்லாததை வைத்து எத்தனை நல்ல படங்களை இவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

புகழேந்தியின் காற்றுக்கென்ன வேலி திரைபடத்தை இப்படித்தான் இவர்கள் காலி செய்தார்கள்.
இலங்கைத் தமிழர்கள் படும் துயரங்களை விட விடுதலை புலிகள் பற்றிய உண்மைகள் உலகுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் இவர்கள் காட்டிய அக்கறை அளப்பரியது.
சமூகத்தின் இருண்ட பக்கங்கள் சினிமாக்கள் மூலம்தான் வெளிச்சத்துக்கு வந்து அவைகள் திருத்தப் பட வேண்டும்.

தணிக்கை குழு என்ற பெயரை இனிமேலாவது பத்திரிகைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சான்றிதழ் குழு என்றே அது அழைக்கப் பட வேண்டும்.
தணிக்கை செய்யும் உரிமை இல்லாத குழுவிற்கு எப்படி அந்த பெயர் வந்தது என்றே தெரியவில்லை.

பத்திரிகைகள் செய்த வரலாற்றுப் பிழை இனி தொடரக் கூடாது.
திரைப்பட சான்றிதழ் குழு என்றே இனி அழைப்போம்.
.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top