இந்திய அரசியல்

கேரள மார்க்சிஸ்ட்கள் முல்லை பெரியாறு அணையை புதிதாக கட்டுவார்களாம்??

Share

தேர்தலை ஒட்டி கேரளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு  அணையை புதிதாக கட்டுவதாக மார்க்சிஸ்டுகள் அணி உறுதியளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலோ இங்கே உள்ளவர்கள் உச்சநீதி மன்ற  தீர்ப்பின்படி  அணையின் மட்டத்தை உயர்த்தி நிலைநாட்டுவோம் என்கிறார்கள்.

அகில இந்திய கட்சிகள் என்றால் மாநிலத்துக்கு மாநிலம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்னை இருந்ததில்லை.

யாரும் கேட்க மாட்டார்கள் அல்லவா?   மாநில கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் .   ஆனால் தேசிய கட்சிகள் அகில இந்தியாவிலும் இருந்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளலாம்  என்றால் அவர்களுக்கு தேசிய கட்சிகள் என்ற பெயர் எதற்கு?

மார்க்சிச்டுகள்  கேரளத்தில்  காங்கிரசைத்தான்  எதிர்த்து போராடுகிறார்கள்..    ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தாவை எதிர்ப்பதற்கு காங்கிரசுடன்  எழுதப் படாத ஒப்பந்தத்தின் படி  அவர்களோடு இணைந்து வேலை செய்து மம்தாவை  வீழ்த்த முனைகிறார்கள்.

கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் !   மார்க்சிஸ்டுகளுக்கு அல்ல.

தமிழ் நாட்டில் யார் என்னவேண்டுமானாலும் பேசலாம்??!!    யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்???!!

 

This website uses cookies.