Connect with us

கவுரவக் கொலைகளை தடுப்பது எப்படி? உடுமலை சங்கர் கடைசியாக இருக்கட்டும்??!!!!

Latest News

கவுரவக் கொலைகளை தடுப்பது எப்படி? உடுமலை சங்கர் கடைசியாக இருக்கட்டும்??!!!!

Dalit Youth Udumalapet Shankar Murderகவுசல்யா 19 வயதில் படிப்பை நிறுத்தி விட்டு நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவருக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
கவுசல்யா தேவர் என்பதும் சங்கர் தலித் என்பதும் போதாதா பிரச்சினைக்கு ?. கணவனை விட்டுவிட்டு வந்துவிடு என்பக்தை கவுசல்யா ஏற்காததால் பட்டப்பகலில் கடைத்தெருவில் சங்கர் கொலை செய்யப்பட கவுசல்யா தலையில் வெட்டோடு பிழைத்திருக்கிறார் .
கொன்றது கூலிப்படையா என்பது காமிராவில் பதிவாகி இருக்கிறது. . தந்தை சரண் அடைந்திருக்கிறார். மற்றவர்கள் இனி பிடிபடுவார்கள். தண்டிக்கப் படுவார்கள்.

மூன்றாண்டுகளில் 98 கொலைகள் நடந்திருப்பதாக தகவல்கள். தர்மபுரியில் நடந்த கொலை அன்புமணியை எம் பி ஆக்கத்தான் உதவியது.
வளர்த்த மகள் 18 வயதில் பெற்றோரை உதறி விட்டு விரும்பும் காதலனை மணக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நியாயம்? நியாயத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள முரணை களைய என்ன விவாதம் நடை பெற்றிருக்கிறது.?

கொல்பவன் முடிந்தால் தப்பிப்போம் இல்லையேல் தண்டனையை அனுபவிப்போம் என்றுதானே கொல்கிறான்.
கடுந்தண்டனை குற்றங்களை குறைக்க முடியும் என்றால் இருக்கும் சட்டங்களே போதும். இருக்கும் சட்டங்களை அமுல் படுத்தாமல் புது சட்டங்களை கொண்ட வருவதில் என்ன பொருள் இருக்கிறது.

கொல்பவர்களை மன நோயாளிகளாக பாவித்து மருத்துவம் செய்ய வேண்டும். ஆசையுடன் பொறியியல் படிக்க வைத்த தந்தையின் கனவு சிதைந்தது. கனவுகளுடன் பட்டம் படிக்க வைத்த குடும்பம் சிறையில் வாடுகிறது. இரண்டு குடும்பங்களும் தத்தளிக்கும் நிலைக்கு யார் காரணம்?
பிரச்னை காவல் துறைக்கு போனவுடன் இதை சரியான முறையில் கையாண்டு கொலையை காவல் துறை தடுத்திருக்க முடியாதா?
வடக்கே ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் சகோதர சகோதரிகள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என்ற பொருந்தா விதி காப் பஞ்சாயத்தால் இன்னமும் சட்டத்துக்கு புறம்பாக அமுல் படுத்தப் பட்டு வருகிறதே?

பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணம் செய்யும் உரிமையை 21 வயது என்று நிர்ணயிக்க சட்டப்படி முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
சாதி ஒழிப்பு ஒன்றே இறுதி இலக்கு என்பதை எல்லாரும் ஒப்புக் கொள்ளும்போது இந்தப் பிரச்சினைகள் மறைந்து விடும்.

சட்டப் படி சாதியை ஒழிக்க முடியுமா என்பதும் கேள்விக்குரிய ஒன்று.
முடியாது என்பதே உண்மை என்றால் கொலைகளை தவிர்க்க என்ன வழி என்பதே அடுத்த கேள்வி?
சட்டமும் தண்டனையும் மட்டுமே போதும் என்றால் நாட்டில் குற்றங்களே நடை பெறாது.
கட்சிகள் ,ஆட்சியில் இருப்போர் , சங்கங்கள் என அனைவரும் கலப்பு திருமணங்களை நடைமுறைப்படுத்த முன் வந்தால் மட்டுமே சாதி ஒழிப்பு இலட்சியம் நிறைவேறும். !!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top