Connect with us

கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவம்!!! கூட்டணி குழப்பங்களுக்கு அதுவே தீர்வு!!

Latest News

கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவம்!!! கூட்டணி குழப்பங்களுக்கு அதுவே தீர்வு!!

Partywise Vote Shareதலை சுற்றுகிற அளவிற்கு அரசியல் கட்சிகளின் பேர அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருகிறது.
வாங்கும் வாக்குகளுக்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதி கள் என்ற ஏற்பாடு இருந்தால் உட்கட்சி ஜனநாயகமும் காப்பாற்றப்படும்.

உலக நாடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவம் அமுலில் இருக்கிற நாடுகளின் அனுபவங்களை அலசி விவாதித்து அவற்றை மேம்படுத்தி இந்தியாவில் அமுல் படுத்த வேண்டும். அதுவே உண்மையில் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை சட்ட மன்றங்களுக்கு அனுப்பும்.
இரண்டும் கலந்த கலவையாக அந்த ஏற்பாடு இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் எந்த பொது பதவியிலும் இரண்டு முறைக்கு மேல் தொடர முடியாது என்ற வரையறையும் வேண்டும்.

ஆயுட்கால தலைவர் என்ற முறை கூடாது. அதே நேரத்தில் ஒருவர் அரசியலுக்கு வந்து இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர முடியாது என்றால் அவர் அரசியலில் இருக்க முடியாது என்று பொருள் அல்ல.. வேறு பொறுப்புகளில் தொடரலாமே??
தமிழ் நாட்டில் ஐந்து முனை ஆறு முனை போட்டி வந்தால் உண்மையான பிரதிநிதிகள் வர முடியாத நிலை உருவாகலாம்.
தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்பதையே இந்த கூட்டணி குழப்பங்கள் தெளிவாக்குகின்றன .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top