இந்திய அரசியல்

உத்தரகாண்டில் பா ஜ க ஆடும் ஜனநாயக கொலை தாண்டவம்???!!!

Share

உத்தரகாண்டில் மொத்தம் 70  உறுப்பினர்களில் காங்கிரசுக்கு 36 ,  பா ஜ க வுக்கு  28, சுயேச்சைகள்      6   உறுப்பினர்கள் உள்ளனர்.     காங்கிரஸ் அரசு ரவாத் தலைமையில் ஆட்சியில் உள்ளது.

இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள்  9 பேர் போர்க்கொடி உயர்த்தி நிதி  மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முயன்றதால்  மசோதாவை குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியதாக அறிவித்து விட்டு அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் படி நீக்கினார் சபாநாயகர்.

இந்த நேரத்தில் மத்திய அரசு இடையில் புகுந்து அரசியல் சட்ட பிரிவு 356  ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தியது.     இது செல்லாது என்று உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து      வரும்  27 ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

9 உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியா இல்லையா என்பதுதான் இந்த பிரச்னையில் மையக் கருத்து.

சட்ட மன்றத்தி ல்தான் பெரும்பான்மை நிரூபிக்கப் பட வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட   உச்ச நீதி மன்ற தீர்ப்பு.

36 பேரில்   9  பேரை இழுத்து ஆட்சியை கவிழ்க்க பா ஜ க செய்த சதி இதில் நன்றாகவே  வெளிப்பட்டு விட்டது.   நான்கில் ஒரு பகுதியினர் கட்சிக்கு எதிராக பட்டால் தகுதி இழப்பு வரும் என்பது தெரிந்தே ,    நிதி மசோதாவை தோற்கடித்தால் ஆட்சி கலைந்து விடும் , பிறகு  பார்த்துக் கொள்ளலாம் என்று பா ஜ க சதி செய்து இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் செய்த அடக்கு முறையால் பாதிக்கப் பட்ட  பா ஜ க ,  தான் ஆட்சியில் அமர்ந்த பின்  தானே அந்த குற்றத்தை வெட்கமில்லாமல் செய்யத் துணிந்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப் படும்.

இதில் பா ஜ க தோற்கப் போவது உறுதி.

This website uses cookies.