முல்லைபெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் ஆபத்து என அ தி மு க அரசு கூறுவது நியாயமா? யார் மீது பழியை போட திட்டம் ???

                 அணையின் பாதுகாப்பிற்கு கேரளா அரசு செய்யும் பாதுகாப்பு செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.    ஆனால் ஆய்வுக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளா போலீசார் அடிக்கடி தடுத்து நிறுத்துவதால் தொழிலக  பாதுகாப்பு படையின் வசம அணையை விட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 
                கேரளா அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசு தானே அதை செய்ய மறுத்து விட்டது. 
                பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீண்டும் மனு செய்த தமிழக அரசு உளவுத் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி அணைகளை தகர்த்து மின் உற்பத்தி நிலையங்களை தகர்த்து பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த ஜெய்ஷ் இ முகமது , லஷ்கர் இ தொய்பா  இந்தியன் முஜாஹிதீன் , மற்றும் வ்டுதலை புலிகளின் ஆதரவாளர்களால் திட்டமிடப் பட்டு வருவதாக அறியப்படுவதால் அணையின்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனுவில் கூறியிருப்பதுதான் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது. 
                  தமிழக அணைக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எப்படி காரணமாக இருப்பார்கள்.?.    விடுதலை புலிகள் அழிக்கப் பட்டாலும் அதன் ஆதரவாளர்கள் செயல் பாட்டில் இருபதாக கூறும் இந்திய அரசின் உளவுத் துறையின் அறிக்கையை தமிழக அரசு தனது அரசியல் திட்டங்களுக்காக அதை முல்லைபெரியார் அணைப பிரச்சினையில் பயன் படுத்த முனைந்தது எதனால்? 
                     நாளை கேரளா அரசின் சதியால் யாராவது அணைக்கு சேதம் ஏற்படுத்தினால் அந்த பழியை இங்குள்ள தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளின் மேல் போட்டு அவர்களை ஒடுக்க மத்திய அரசின் துணையோடு மாநில அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?   
                       இங்கு எல்லாமே அரசியல்!!!     கேரளாவின் முதல்வர் உம்மன் சாண்டியும் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமர் மோடியை பார்க்கின்றனர்.    அந்த ஒற்றுமை தமிழகத்தில் வரும் நாள் எந்நாளோ அந்நாளே நன்னாள் . 
                       மொத்தத்தில் அ தி மு க அரசின் கூற்று அபத்தம்.!!!! 
                   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here