கோட்சேவுக்கு சிலையாம் ? உட்பொருள் என்ன?

இந்து மகாசபை கோட்சே வுக்கு சிலை வைக்க திட்டமிட்டு சாமியார்களை அணி திரட்டி வருகிறார்கள் . 
காந்தியை உலகமெங்கும் போற்றி வருகிறார்கள். போரினால் உலகம் அழியும் என்ற ஆபத்தினின்று அகிம்சை தத்துவமே காக்கும் என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கி விட்டது. 
       அகிம்சை தான் உலகின் வலுவான ஆயுதம் என்ற காந்தியின் கொள்கை பரவிக் கொண்டுள்ள நேரத்தில் இந்தியாவில் அவரைக் கொன்று தூக்கில் ஏற்றப்  பட்ட கொலைகாரனுக்கு நாடெங்கும் சிலை வைப்போம் என்று அறிவித்து செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் எந்த தைரியத்தில் இதை செய்கிறார்கள்? 
     பா.ஜ.க. ஆட்சி இருக்கிற தைரியம்தானே ?  
     மத வெறிக் கொள்கைகளை அமுல் படுத்துவதற்கும்  இந்தி சமஸ்க்ரிதத்தை புகுத்துவதிலும்  அவர்கள் பயன் படுத்தும் பாணியை மக்கள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
     யாரையாவது விட்டு பேசச் சொல்லி ஆழம பார்ப்பது .    எதிர்ப்பின் அளவுக்கேற்றவாறு புகுத்தும் நேரத்தை தீர்மானிப்பது என்பது தான் அந்த உத்தி. 
     மத்திய மாநில அரசுகள் உடனே செயல் பட்டு இம்மாதிரி பேசுபவர்கள் செயல்படுபவர்கள் மீது கடுமையான குற்ற தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தவிர இவர்கள் அடங்க மாட்டார்கள். 
    பார்ப்பனர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு தண்டணை அவர்களது சிகையை களைவது மட்டுமே என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்து மனு நீதி யை அமுல்படுத்த முயற்சிக்கும் முன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். 
     இது எங்கு போய் முடியுமோ ? 
     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here