Connect with us

ரொட்டியில் புற்று நோய் உருவாக்கும் ரசாயனம் கலப்பதை தடை செய்து உத்தரவு???!!

Latest News

ரொட்டியில் புற்று நோய் உருவாக்கும் ரசாயனம் கலப்பதை தடை செய்து உத்தரவு???!!

இதுநாள்வரை புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த ரொட்டிகளையே  நாம் சாப்பிட்டு வந்திருக்கிறோம்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள 84 % சாதாரண உரைகளில் விற்கப்படும் ரொட்டிகளை ஆராய்ந்த விஞ்ஞான சுற்றுப்புற பாதுகாப்பு  மையம் அவைகளில் பொட்டாசியம் ப்ரோமெட் மற்றும் பொடாசியம் ஐயோடெட்  கலந்திருப்பதாக கண்டறிந்திருக்கிறது.

இந்த இரண்டும் இங்கிலாந்து ,ஐரோப்பிய நாடுகள், கனடா ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் கூட  பேக்கரி பொருட்களில் பயன்படுத்த  தடை செய்யப் பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு   மாக்கி நூடுல்ஸ் தடை செய்யப் பட்டு பின்பு மீண்டும் சில மாற்றத்திற்குப்பின் மீண்டும் வந்திருக்கிறது .

இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு விதிகள் இந்த இரண்டு ரசாயனங்களையும் ஒரு மில்லியனுக்கு ஐம்பது மற்றும் இருபது பங்கு இருக்கலாம் என்று இருப்பதாக சொல்கிறார்கள்.     மறு பரிசீலனைக்கு உரியவை இவை.

இந்த அறிவிப்புக்கு பிறகு ரொட்டி தயாரிப்பாளர்கள் மேற்கண்ட ரசாயனங்களை பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்ர்கள்.     காரணம்  விற்பனையில்  ஏற்பட்ட பத்து சத விகித வீழ்ச்சி.

மக்களை பாதுகாப்பது அரசின் கடமை.     அதாவது தரமான உணவு கிடைக்கச் செய்வது அதைவிட அத்தியாவசிய கடமை.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top