Connect with us

ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் மேலும் 2 பேர் பலி??!!

jayalalitha

Latest News

ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் மேலும் 2 பேர் பலி??!!

ஜெயலலிதா  விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்யும்போது இரண்டு பேர் பலியான சம்பவம் குறித்து சென்ற 13 ம் தேதி எழுதியிருந்தோம்.

நேற்று சேலத்தில் பிரசார கூட்டத்தில் மேலும் இரண்டு பேர் பலியாகி யிருக் கின்றனர்.

மனிதர்களை மாட்டு மந்தைகளாக பாவித்து காலை பத்து மணிக்கு கூட்டி வந்து மதியம் மூன்று மணி வரை அடைத்து வைத்தால் , அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?!!

முந்தைய சம்பவம் அவர்களது கண்களை திறக்க வில்லை.  காலை பதினொரு மணி முதல் மூன்று மணி வரை  வெளியே வராதீர்கள் என்று வானிலை மையம் அறிவுறுத்துகிறது.

ஆந்திரா,  தெலுங்கானா , ஓடிசாவில் 150  பேர் வெயிலுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் ஒரு மகாராணியைப்போல் அதிகாரம் செய்து கொண்டு எப்படித்தான் மக்களால் நான்  மக்களுக்காக நான் என்று சொல்ல முடிகிறதோ ?

நாட்டையே ஏமாற்றி உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டு எனக்கு யாருமில்லை  என்று  பசப்பு வார்த்தைகள் கூறுவதை நாட்டு மக்கள் இன்னும் எத்தனை காலம் நம்பி

வாக்களிப்பார்கள் ???!!!

நடந்தது விபத்து அல்ல.    அலட்சியத்தால் விளைந்த கொலை.    சட்டம் நாட்டில் இருக்கிறதா?    இருந்தால் ஜெயலலிதா மீதோ இறப்பிற்கு காரணமானவர்கள் மீதோ கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்??!!!

என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்???

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top