Connect with us

ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு பிரணாப் முகர்ஜி சென்றதன் செய்தி என்ன?

Pranab Mukherjee

இந்திய அரசியல்

ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு பிரணாப் முகர்ஜி சென்றதன் செய்தி என்ன?

ஆர் எஸ் எஸ் முகாமுக்கு ஒரு காங்கிரஸ் தலைவர் செல்கிறார் என்றால் அதற்கு ஒரே அர்த்தம் தான் உண்டு.    அவர் பாதை மாறத் தயாராகி விட்டார் என்பது தான் அந்த செய்தி.

சமய கொள்கை , மதம், வெறுப்பு சகிப்பின்மை இந்தியாவின் அடையாளம் அல்ல என்று பிரணாப்முகர்ஜி சொல்லித்தான் ஆர் எஸ் எஸ் காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

அது தொடர்பாக நீண்ட நெடிய விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவர் போய் அவர்களை மாற்றி விட முடியுமா?

அந்த நம்பிக்கையில் இவரும் போகவில்லை.   அவர்களும்  எங்களுக்கு பாடம் எடுக்க வாருங்கள் என்று அழைக்க வில்லை.

ஆர் எஸ் எஸ் தீண்டத் தகாத இயக்கம் அல்ல என்பதை , மத வாத இயக்கம் அல்ல என்பதை   , எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.    இதோ பாருங்கள் இப்போது காங்கிரஸ் தலைவர்களே எங்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சரி. அதற்கு ஏன் பிரணாப் ஒத்துப் போக வேண்டும்.?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் சொல்வார்கள்.   காங்கிரஸ்  காரனை கீறிப் பார்.  ஒரு இந்து மகாசபை காரன் தெரிவான் என்று.

அதே போல் பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சங்கத்துக்கு வேண்டியவர்களே.

காங்கிரஸ் கட்சியில்  இருந்தாலும் அவர்களுக்கு  சங்க பாசம் உள்ளே இருக்கும்.

பூனே சத்பவன் பிராமணர்கள் தான் சங்கத்தின் சர் சங் சாலக் ஆக வர முடியும் என்ற விதியை தளர்த்த தயாரா?

ஜோதிபாசு முப்பது ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர்.  பகவத் கீதையை படிக்கச் சொன்னார்.

நம்பூதிரி பாட் கேரள மூத்த மார்க்சிஸ்டு தலைவர்.   வர்ணாசிரம பெயரை விட்டுக் கொடுக்க வில்லையே.

சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் தலைவர். தான் ஒரு பார்பனர் என்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.     இப்போதும் மார்க்சிஸ்டுகள் பிராமண கட்சி காரர்கள் இந்திய கம்யுனிஸ்டுகள் பிராமணர் அல்லாத கம்யுனிஸ்டுகள் என்றும் தான் அறியப் படுகிறார்கள்.

நாளை  தேவைப் படும் என்பதால் பிரணாப்பை சங்கம் குறி வைக்கிறது.

தலைமைக்கு வெற்றிடம் இருந்தால் அதை நிரப்ப முதலில்  தகுதி வாய்ந்த பார்ப்பனர், கிடைக்காத பட்சத்தில் பார்ப்பனீய அடிமை,  அடுத்து பார்ப்பனீய நட்பு பாராட்டுபவர், கடைசியில் பார்ப்பநீயத்துக்கு எதிராக வராதவர் , இதில் முதல் இடத்தில் பிரணாப் பொருந்துவார் என்பது ஒரு கணிப்பு.

எப்போதும் சங்கம் நான்கைந்து தேர்வுகள் வைத்திருக்கும்.

இதையும் பாராட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்ல பண்பாடாம்.   ஏன் மார்க்சிச்டுகளிடம் போய் பேச வேண்டியதுதானே?      நக்சலைட்டு களிடம் பேச வேண்டியதுதானே?

சங்கம் தன்னை சுய பரிசோதனை செய்ய முன்வந்தால் நல்லதே?!

சிறுபான்மை , தலித் , பிற்பட்ட  மக்களின் உள்ளக் குமுறல்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க சங்கம் தயாரானால் நல்லதே?!

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.

விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் அது மதத்தில் தாங்கள் வைத்திருக்கும் ஆதிக்கத்தையும் தகர்த்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

எனவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

கடைசி வரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவே முயற்சிப்பார்கள்.   முடியாவிட்டால் இந்து  அமைப்பே தகர்ந்தால் கூட கவலைப் பட மாட்டார்கள்.

இது ஆதிக்க மனோபாவம் கொண்ட எல்லாருக்கும் பொருந்தும்.

வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களை கொண்டு வந்தால் மட்டுமே மாற்றங்களை  அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.   அதற்கு மற்றவர்கள் ஒற்றுமையுடன் பாடு படவேண்டும்.

காலம் அந்த மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top