கல்வி

குண்டர்களை வைத்து மாணவர்களை தாக்கிய இந்து ரக்சா தளம்?

Share

ஜேஎன்யு பல்கலைகழக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்வைத்து போராடி வருகிறார்கள். கட்டண உயர்வும் ஒரு காரணம். மேலும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தையும் மாணவர்கள் கடுமையாக எதிர்த்து போராடினார்கள்.

பொறுக்க வில்லை பாஜகவுக்கு. முகமூடி அணிந்த ஆயுதமேந்திய குண்டர்கள் நூறு பேர் பல்கலை கழகத்துக்குள் புகுந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண் மூடித் தனமாக தாக்கினார்கள். மாணவர்கள் தங்கும் விடுதிக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள்.

இத்தனைக்கும் பல்கலைகழக வாயிலில் காவல் துறை ஆயுதங்களுடன் காவல் காத்து நிற்கிறது.

ஒருவரையும் கைது செய்யவில்லை காவல்துறை.

இடதுசாரி மாணவர்களுக்கும் ஏபிவிபி என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் விரோதம் காரணமாக தாக்கிக் கொண்டார்கள் என்று பிரச்னையை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.

புகார் கொடுத்த தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சங்க தலைவி ஆயுஷே கோஷ் மீதே வழக்கு பதிவு செய்யப் படுகிறது. காவலாளியை தாக்கியதாக வழக்கு.

இத்தனைக்கும் பின்னால் துணை வேந்தர்  இருக்கிறார் என்பது இடது சாரிகளின் குற்றச்சாட்டு. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  வலுத்து வருகிறது .

மாணவர்களை காக்க வேண்டிய துணை வேந்தர் தாக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு துணையாக நிற்கிறார்.

திடீர் என்று இந்து ரக்ஷா தளம் என்ற இந்து அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தங்கள் அமைப்புதான் தாக்குதல் நடத்தியது என்று பொறுப்பேற்றுக் கொண்டு விடியோ வெளியிடுகிறார்.

உண்மையில் அவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்களா அல்லது ஏபிவிபி அமைப்பை  காப்பாற்ற இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.

ஒரே கேள்வி ஏன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிங்கி சவுத்ரி மீது கடுமையான நடவடிக்கை இல்லை? 

சுதந்திர இந்தியாவில் இதுபோல் பல்கலை கழக மாணவர்களை குண்டர்கள் வளாகத்துக்குள் புகுந்து தாக்கியதாக வரலாறு இல்லை.

இந்து பாசிசம் வீறுநடை போடத் துவங்கி விட்டது என்பதன் அடையாளம்தான் இந்த தாக்குதல் என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

வேடிக்கை என்னவென்றால் இதை கண்டிக்காத பாஜக தலைவர்களே இல்லை. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் என்று எல்லாரும் இந்த தாக்குதலை கண்டித்து விட்டார்கள்.

ஆனால் நடவடிய்கை தான் இல்லை.

இப்படி இரட்டை வேடம் போடுபவர்களை என்ன செய்வது?

This website uses cookies.