ஜல்லிக்கட்டு நடக்க என்ன செய்ய வேண்டும்?

Share

பொன் ராதாகிருஷ்ணன் ,மத்திய அமைச்சர் என்ற முறையில் எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்று சொன்னதை வைத்து ஸ்டாலின் நடத்த இருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு 07.05.2014 ல் வந்த பிறகு சீராய்வு மனு செய்த தமிழக அரசு அதை விரைவு படுத்த ஏதும் செய்யாமல் மத்திய அரசை நோக்கி அவசர சட்டம் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பு உச்ச பட்ச அபத்தம் . ஆனால் எல்லாரையும் கட்டுப் படுத்தும் என்பதால் அதை மாற்றினால் அல்லது திருத்தினால் தவிர ஜல்லிக்கட்டு நடத்துவது சிரமம்.

காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி கரடி யோடு காளையை சேர்த்த தால் தான் உச்சநீதி மன்றம் அப்படி ஒரு தீர்ப்பு சொல்ல வேண்டி வந்தது.
சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகார் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி அளித்துள்ளார்.

11.07.2011 தேதிய உத்தரவில் காளையை நீக்கிவிட்டால் போதுமா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாக உத்தரவு போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப் பட்ட நிலையில் அவசர சட்டம் வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது.

உச்சநீதிமன்ற அவமதிப்பு வந்துவிடாமல் வேறு பார்த்து கொள்ள வேண்டும்..
மத்திய அரசு நிர்வாக உத்தரவு மூலம் காளையை காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசே பழைய தி மு க அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு நெறி முறைபடுத்தும் சட்டத்தை அவசர சட்டம் மூலம் கொண்டு வர முடியுமா என்றும் பார்க்க வேண்டும் .

தமிழர்களுக்கு என்று தனி பண்பாடு எதுவும் இல்லை என்று நிரூபிக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல் படுகிறது.
எல்லா சதிகளும் ஒருபோதும் நிறைவேற போவதில்லை.
நாங்கள்தான் சாதித்தோம் என்று வாக்கு வாங்க
பா ஜ க திட்ட மிட்டாலும் சரி ஜல்லிக்கட்டு வரவேண்டும்.

This website uses cookies.