பியுஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்டகொடுமை??! பொதுத் தொண்டு செய்த ராஜஸ்தானிக்கு கிடைத்த பரிசு??!

Share

பியுஷ் மனுஷ் சேலத்தை சேர்ந்த ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர்.    ராஜஸ்தானி.   வடக்கே இருந்து சம்பாதிக்க வருவார்கள்.

இவர் சேலத்தின் மண்ணையும் தண்ணீரையும் காக்கப் போகிறேன் என்று சேலம் மக்கள் குழு என்று அமைத்து ஏரிகளை  குளங்களை  மீட்டெடுப்பது போன்ற வேலைகளை வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறார்.

உலகம் முழுதும் சுற்றச் சூழல் ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடப்பது வாடிக்கை யாகிவிட்டது.

பொதுமக்களின் விழிப்புணர்வு இந்த அத்து மீறல்களுக்கு கண்டனங்களை தெரிவித்து நடவடிக்கை எடுத்திருந்தால் அதிகார வர்க்கம் நல்லது செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்த தயங்கும்.

தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.   யாரோ வந்து இங்கே நல்ல காரியம் செய்ய முடிகிறது.

கோடிக்கணக்கில்  நன்கொடை வசூலித்து பொது மக்களை பங்கேற்பாளர்கள் ஆக மாற்றி அரசியல் வாதிகள் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் குடி மராமத்து வேலையை கிராமமே செய்து கொள்ளும்.     ஆனால் இப்போது  அரசு செய்கிறது.   காலம் தாழ்ந்து , தரம் குறைந்து , ஊழல் செய்து செய்யப்படும் வேலைகளால் முழுப் பயனும் கிடைப்பதில்லை.

பாராட்ட வேண்டிய வேலையை செய்ததற்கு பரிசாக ஜெயலலிதா ஆட்சி தடி அடியைத்தான் தரும் என்பது உறுதிப் பட்டிருக்கிறது.

கட்சி அனுதாபம் தாண்டி நல்லது செய்பவர்களுக்கு பொது மக்கள் தோள் கொடுக்க வேண்டும்.    தவறினால் நட்டம  நமக்குத்தான்.

 

 

This website uses cookies.