வாட்ஸ் அப்பில் ஜெயலலிதா செய்த அலப்பறை??!!!

Share

வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சு வாட்ஸ் அப்பில் பரவியது.
” தொடர் மழை ஏற்படுத்திய சேதங்களால் நினைத்து வருந்துகிறாராம். மக்களோடு எப்போதும் இருப்பாராம் ? மக்களை மீட்டு புது மலர்ச்சி அடையச் செய்வாராம் ? நிவாரணப் பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டிரிக்கிறாராம். மக்கள் துனபங்களை எல்லாம் இவரே சுமக்கிறாராம். தனி வாழ்க்கை கிடையாது உறவினர் கிடையாது .இல்லமும் உள்ளமும் தமிழகம்தானாம் ? எத்துயர் வரினும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்று முடித்திருக்கிறார்.

எல்லாவற்றையும் இழந்து பரிதவிக்கும் மக்கள் இந்த புலம்பலை கேட்டு மேலும் புண் பட்டுப் போயிருக்கிறார்கள்.
யாருக்கு வேண்டும் இந்த சுய புராணம்? யாரும் இல்லாமலா இத்தனை கோடி சொத்துக்களை குவித்தீர்கள்?
மூன்று முறை நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டும் இன்னும் மக்களை ஏமாற்ற முடியும் என்று நம்புகிறாரே என்ற கோபத்தைத்தவிர இந்த அறிக்கையால் யாரும் சமாதானம் அடையப் போவதில்லை.

நிவாரண நிதியை தவறாக பயன் படுத்தி அதிலும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியை தவறான முறையில் நிர்வகித்து நீரை தேவையில்லாமல் தேக்கியதால்தான் வெள்ள அபாயம் ஏற்பட்டது என்ற குற்றச் சாட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்டது.

உருப்படியான நிவாரண நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மக்களை ஓரளவு சமாதானப் படுத்தலாம். இதுபோல் அலப்பறை அறிக்கைகள் கோபத்தை அதிகப் படுத்தவே செய்யும்.

This website uses cookies.