ஜெயலலிதாவுக்கு தண்ணில கண்டம் ! ( டாஸ்மாக் /பேய்மழை )

Share

ஜெயலலிதாவுக்கு தண்ணீர் ராசி உண்டு என்று அவரே சொன்னதாக தினத்தந்தி தலையங்கம் எழுதியிருக்கிறது.
லட்சோப லட்சம் தொண்டர்கள் ‘அம்மா ‘ என்று கொண்டாடும் ஜெயலலிதா ஆயிரம் தவறுகளை செய்து விட்டு கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு, “இத்தனையும் யாருக்காக” என்ற ஒரே கேள்வியை கேட்டு , தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

சசிகலாவும் இளவரசியும் ரத்த பந்தம் உள்ளவர்கள் அல்ல என்பதால் , பிராமணர்கள் அல்ல என்பதால் , இதில் ஜெயலலிதாவின் சுயநலன் என்பது குடும்பம் சம்பந்தப் பட்டது அல்ல அவரது தனிப்பட்ட நலன் மட்டுமே என்பது தொண்டர்களின் முடிவு.

ஆனால் பொதுமக்களின் முடிவு மெல்ல மெல்ல மாறிவருகிறது.
டாஸ்மாக் வருமானம் 30 000 கோடி தான் எல்லா இலவசங்களுக்கும் தாய் என்பதோடு அதில் மிடாஸ் கம்பெனிக்கு
கிடைக்கும் கோடிகள் அடுத்த தேர்தலை வெல்ல தாராளமாக போதும் என்ற கணக்கு ஜெயலலிதாவுக்கு அசாதாரணமான துணிச்சலை கொடுத்திருக்கிறது. .

எல்லா கணக்குகளையும் மீறி டாஸ்மாக் ஜெயலலிதாவுக்கு அடுத்த தேர்தலில் தோல்வியைத் தான் தரும் என்பது பல கள ஆய்வுகளில் தெரிய வருகிறது.

அதேபோல் நூறாண்டுக்கு ஒருமுறை வந்த பேய்மழை தேர்தல் ஆண்டிலா வரவேண்டும்?
அரசின் புள்ளி விபரங்கள் பாதிக்கப் பட்டோறை திருப்திப்படுத்தும் என்பது நிச்சயமில்லா நிலை. மாநிலம் முழுதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாநூறை தாண்டும். மொத்த இழப்பு பல லட்சம் கோடிகள். எல்லா இழப்பையும் அரசு ஈடு கட்ட முடியாது. ஆனால் இழந்தவர்கள் அரசின் செயல்படா நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

அரசு யந்திரம் செயல் பட வில்லை என்பது நிச்சயம் அடுத்த தேர்தலில் ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். அரசுக்கு பாதிப்பு தான் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுக்கு தண்ணி, கண்டமா ராசியா என்பதை தெரிந்து கொள்ள நாம் அடுத்த தேர்தல் முடிவு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

This website uses cookies.